[X] Close

மறுபிறவி எடுத்த கட்டபொம்மன், வ.உ.சி! (நடிகர் திலகம் 90)


sivaji-90

வீரபாண்டிய 'சிவாஜி’பொம்மன்

  • kamadenu
  • Posted: 30 Sep, 2018 18:48 pm
  • அ+ அ-

சிவாஜிகணேசன் பிறந்தநாள் (அக்டோபர் 1) ஸ்பெஷல்

தொகுப்பு: மானா பாஸ்கரன்

51. சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த சிவாஜிகணேசன் சிறப்புத் தபால் தலை வெளியீட்டு  விழாவில், கட்சிப்பாகுபாடின்றி அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டது  சிவாஜி என்ற மாபெரும் கலைஞருக்குகிடைத்த சிறப்பு. இந்த விழாவில் சிவாஜி  அவர்களின் நடிப்பு பற்றி வைகோ விவரித்த அழகு, ஒட்டுமொத்தபார்வையாளர்களின் கரகோஷத்தைப் பெற்றது.

52.சென்னை அடையாறில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மணிமண்டபம் திறக்கப்பட்டு 8 மாதங்களுக்கு மேல்ஆகியும் இன்னமும் அவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்கூட  அதில் இடம்பெறவில்லை என்பது சிவாஜி ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி.

53. கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், செவாலியே, தாதா சாகேப் பால்கே ஆகிய விருதுகளைப் பெற்று நடிகர்திலகம் என்று மக்களால் போற்றப்பட்ட மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் கலைத்துறைக்கு ஆற்றிய சேவையைபோற்றிடும் வகையில், அவரது பிறந்த தினமான அக்டோபர் 1-ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாககொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது அந்த மகா கலைஞனுக்கான இன்னொரு கவுரவம்!

54.பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ‘சீதக்காதி’ என்கிற புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி  80 வயது முதியவராக நடித்து வருகிறார். இப்படம் பற்றி அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது ‘’இந்த ’சீதக்காதி’ படத்தில்  சிவாஜிகணேசன் அய்யா  உயிரோடு இருந்து,  அந்த அற்புதக் கலைஞர்  நடிக்க வேண்டிய படம். வேறு ஆப்ஷனேஇல்லாமல்  என்னை நடிக்க வைக்கிறார்.  சிவாஜி கணேசன் அய்யா மட்டும் நடித்திருந்தால் படம் எங்கேயோபோய்விடும்’’ என்றார்

55.வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும் மறுபிறவி எடுத்து  வெள்ளித் திரையில் உங்கள் முன் தோன்றி வீர முழக்கம் செய்ததை  நீங்கள் அறிவீர்கள். மாபெரும் இந்த இரண்டு வரலாற்றுக் காவியங்களையும்தயாரிக்கும் பெருமையை எனக்கு வழங்கி,  ஊக்கமூட்டி.. ஒத்துழைத்த ‘எங்கள் சிவாஜி’யை நான் என்றைக்கும்மறக்க முடியாது!’’.  இப்படி சிவாஜியை புகழ்ந்திருப்பவர் இயக்குநர் பி.ஆர்.பந்துலு.

 56. கே.சுப்ரமணியம் தொடங்கி இன்றைய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வரையில் இதுவரையில் 15 தலைவர்கள்அப்பதவியை வகித்துள்ளனர். இதில் சிவாஜிகணேசன் மட்டுமே நீண்ட காலம் நடிகர் சங்கத் தலைவராகஇருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

57. இவருக்கு நிகராக நடிக்கக் கூடிய ஒரு நடிகர் அகில உலகிலும் இல்லை. ஒருவேளை, ஹாலிவுட் நடிகர் மார்லன்பிராண்டோ முயற்சி செய்தால், இவரைப் போல நடிக்கக்கூடும்' - இப்படி சிவாஜியைப் புகழ்ந்தவர் பேரறிஞர்அண்ணா.

58.  தி.மு.க. ஆட்சியின்போது, சிவாஜியைக் கவுரவிக்கும்விதமாக சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, அவரதுமுழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகக்  கூறிஅங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அடையாரில் அவருக்காக கட்டப்பட்ட மணிமண்டபத்தில் அந்தச் சிலைநிறுவப்பட்டது.

59. சிவாஜி அமெரிக்க அரசின் அழைப்பில் அமெரிக்கா சென்று வந்ததை கவுரவிக்கும் வகையில் விமானநிலையத்தில் இருந்து மாலை மரியாதையோடு அழைத்துவந்து நடிகர் சங்கம் சார்பாக பாராட்டுக் கூட்டம்நடத்தியவர் எம்.ஜி.ஆர்.  எம்.ஜி.ஆர் பாரத் விருது பெற்றதற்காக அதே நடிகர் சங்கம் சார்பாக மிகப் பெரிய பாராட்டுவிழா நடத்தியவர் சிவாஜிகணேசன்.

60.  பிரபலமான மூத்த கலைஞர்களுடன் சேர்ந்து நடிப்பதை 1974 முதல்  நடிகர் சிவகுமார் தவிர்த்து வந்தார்.கதாநாயகனாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். சிவாஜிகணேசன் நடிக்க, பாரதிராஜா இயக்கிய’பசும்பொன்' படத்தில் நடிக்க, 1995ல் அழைப்பு வந்தது. சிவாஜிகணேசனுடன் நடிக்கும் வாய்பை பயன்படுத்திக் கொள்ளும் ஆவலில் இந்தப் படத்தில் நடிக்க சிவகுமார் ஒப்புக்கொண்டார்.

 - தொடரும்... 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close