[X] Close

'பரியேறும் பெருமாள்' படத்துக்காக விக்னேஷ் சிவனின் வித்தியாசமான முயற்சி: இணையத்தில் குவியும் பாராட்டு


vignesh-shivans-different-approach-for-pariyerum-perumal-film

  • kamadenu
  • Posted: 30 Sep, 2018 14:30 pm
  • அ+ அ-

'பரியேறும் பெருமாள்' படத்துக்காக சமூகவலைத்தளத்தில் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான முயற்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு ஆகியோருடன் பல்வேறு புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை விமர்சகர்கள் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விமர்சனத்துக்கு ஏற்றவாறு வசூல் இருக்கிறதா என்றால் இல்லை என்கிறார்கள் படக்குழுவினர். இதற்கான காரணம், போதிய திரையரங்குகள் கிடைக்காததும் ஒரு காரணம். பல்வேறு மல்டி ப்ளக்ஸில் ஒரு காட்சி மட்டுமே ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறார் விக்னேஷ் சிவன். இப்படம் தொடர்பாக தனது பார்வையை ட்வீட் செய்ததன் தொடர்ச்சியாக, “அன்பு ஆமிர்கான், அமிதாப் பச்சன்... ’தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்தை பார்த்து மகிழ இருக்கிறோம். அதே சமயம்   நீங்களும் பா. இரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் உருவான,  மனிதநேயத்தையும், மாறாத ஏற்றத் தாழ்வுகளையும் பேசும்  ’பரியேறும்பெருமாள்’ என்னும் மிகச் சிறந்த படத்தைப் பார்த்து, ஆதரிக்க வேண்டுகிறோம்” என்று அமிதாப் பச்சன், ஆமிர்கான் இருவரின் ட்விட்டர் கணக்குகளை குறிப்பிட்டு ட்வீட் செய்தார்.


இந்த ட்வீட்டைப் பார்த்த இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் கஷ்யாப், “இது என்ன படம்? மும்பையில் சப்-டைட்டிலுடன் திரையிடப்படுகிறதா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டார். இதற்கு இயக்குநர் ரஞ்சித்,”மும்பையில் ஆரோரா திரையரங்கில் சப்டைட்டிலுடன் திரையிடப்படுகிறது சார். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்” என்று தெரிவித்தார்.

அனுராக் கஷ்யாப் ட்வீட்டுக்கு பதிலாக “அல்லது, அங்கு ஒரு காட்சிக்கு ஏற்பாடு செய்யலாமா சார்? உங்கள் கருத்தைக் கூறுங்கள்..  அப்படி நடந்தால், திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே,  இந்த பிரம்மிக்க வைக்கும் கலைப் படைப்பு இங்குள்ள திரையரங்குகளில் நல்ல கவனத்தையும் ஆதரவையும் பெறும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

— Vignesh ShivN (@VigneshShivN) September 30, 2018


’பரியேறும் பெருமாள்’ படத்துக்காக விக்னேஷ் சிவனின் இந்த முயற்சி, சமூகவலைத்தளத்தில் அனைவரது மனங்களையும் கொள்ளைக் கொண்டு வருகிறது.
 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close