[X] Close

பிக்பாஸ் வீட்டில் அர்ஜூன் ரெட்டி விஜயம்!  - வர்றாரு ’நோட்டா’ விஜய் தேவரகொண்டா!


vijay-devarakonda-biggboss2

பிக்பாஸ் கமலுடன் விஜய் தேவரகொண்டா

  • வி.ராம்ஜி
  • Posted: 29 Sep, 2018 20:05 pm
  • அ+ அ-

பிக்பாஸ் வீட்டுக்கு இந்த வாரம் முழுக்கவே தினமும் விருந்தாளிகள் வந்துகொண்டே இருந்தார்கள். இன்றைய தினம் (29.9.18 சனிக்கிழமை) ஒருநாள்தான் பிக்பாஸ் வீடு. நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெறுகிறது பிக்பாஸ் சீசன் 2.

கிட்டத்தட்ட, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் தினம் இரண்டுபேர் வீதம் வந்துகொண்டே இருந்தார்கள். வைஷ்ணவியும் ரம்யாவும் வந்தார்கள். நித்யாவும் ஷாரிக்கும் வந்தார்கள். பாலாஜியும் யாஷிகாவும் வந்தார்கள். மஹத்தும் சென்றாயனும் வந்தார்கள்.

நேற்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை வெளியேறிய அனந்த் வைத்தியநாதன், ரம்யா, யாஷிகா, சென்றாயன், மமதி, வைஷ்ணவி, டேனியல், மஹத், ஷாரிக்,பாலாஜி என அத்தனை பேரும் ஆஜரானார்கள். ஒரே கொண்டாட்டம்தான். குதூகலம்தான். ஜாலிதான் கேலிதான் என ரகளை பண்ணியது பிக்பாஸ் வீடு.

கல்யாண வீட்டுக்கு நாம் போயிருப்போம். உள்ளே பன்னீர் தெளிக்கும் போது ஆரம்பித்து மணமக்கள் வரைக்கும் ஏன் அவங்க வரலை, இவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே என்று கேட்பார்கள். அதேமாதிரி, இத்தனை பேர் வந்திருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் வின்னர் போட்டிக்கு இருக்கும் ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர், மும்தாஜ் மேடமும் பொன்னம்பலம் சித்தப்பாவும் வரலியே என்று ஏக்கத்துடன் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள்.

இந்த நாளில், பிக்பாஸ் வீட்டுக்குள் செம சர்ப்ரைஸாக உள்ளே வந்து இன்னும் கலகலப்பூட்ட வருகிறார் அர்ஜுன் ரெட்டி. ஆமாம்… அர்ஜுன் ரெட்டி மூலம் எல்லோர் மனதையும் மொத்த குத்தகைக்கு எடுத்துக்கொண்டிருக்கும் ஆந்திர நாயகன், அடுத்த வாரம் தமிழிலும் தெலுங்கிலும் ரிலீசாக உள்ள நோட்டா பட நாயகன் விஜய் தேவரகொண்டா பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று வருகிறார்.

அக்கட தேசத்தில் இருந்து கொண்டே, இங்கே கணிசமாக ரசிகர்களை தன் பக்கம் இழுத்திருக்கும் விஜய் தேவரகொண்டாவை ஸ்க்ரீனில் பார்க்க, பிக்பாஸ் நேயர்கள், இப்போதே ரிமோட்டும் கையுமாக டிவிக்கு முன்னே உட்கார்ந்துகொண்டிருக்கிறோம் என்று அர்ஜுன் ரெட்டி ரசிகர்கள், ஆர்வம் பொங்கச்சொல்லுகிறார்கள்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close