[X] Close

'செக்கச்சிவந்த வானம்' - திரையுலக பிரபலங்கள் சொன்னது என்ன?


what-tamil-industry-peoples-think-about-chekka-chivantha-vaanam

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 20:03 pm
  • அ+ அ-

’செக்கச்சிவந்த வானம்’ தொடர்பாக தமிழ் திரையுலகினர் தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்திருந்த இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் 8.05 கோடி வசூல் செய்திருக்கிறது. 

'செக்கச்சிவந்த வானம்' தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அவற்றின் தொகுப்பு:

விக்னேஷ் சிவன்: சினிமா ரசிகர்களுகு ஒரு விருந்து. அருமையான நடிகர்கள். ஸ்டைலான எஸ்.டி.ஆரிடமிருந்து அற்புதமான நடிப்பு. ஆக்ரோஷமான அரவின்சுவாமி, மிரட்டலான அருண் விஜய், எப்போதும் அட்டகாசமான விஜய் சேதுபதி. படத்தின் பெண்களும் இதே அளவு அற்புதத்தைக் காட்டுகிறார்கள். இதில் ஜோதிகா மேடம் அதிக வெளிச்சத்தைப் பெற்றுள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை எப்போதுமே நமக்கு விருந்து தான். நம்மை அப்படியே விழுங்குகிறது. அந்த குடும்பத்தில் நாமும் ஒரு உறுப்பினரைப் போல உணர வைக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான வைரமுத்து வரிகள், ஸ்ரீகர் பிரசாத் மற்றும் சந்தோஷ் சிவனின் அற்புதமான உழைப்பு. கடைசியாக படம் எடுக்கும் காதல் கொண்ட மணிரத்னம். அனைத்து விதமான ரசிகர்களுக்குமான படம். எழுத்து, இயக்கத்துக்கு புதிய தரத்தை நிர்ணயித்துள்ளார்கள். இந்த அற்புதமான கலையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். 

விக்ரம் பிரபு: மணிரத்னம்+ஏ.ஆர்.ரஹ்மான் - ஒட்டுமொத்த குழுவின் உயர்ந்த உழைப்பு. 

கார்த்தி: மொத்தமாக சுவாரசியமான, பொழுதுபோக்கான படம். அற்புதமான நடிகர்கள். எல்லோரும் சிறப்பாக இருக்கிறார்கள். படம் முடியும் வரை மணிசார் அவரது பிடியில் நம்மை வைத்துள்ளார்.

சீனு ராமசாமி: செக்கச்சிவந்த வானம் இன்று பார்த்தேன். சந்தோஷ் சிவனின் மூர்ச்சையாக்க வைக்கும் ஒளிப்பதிவு, எல்லா நடிகர்களின் நடிப்பு, மணிரத்னத்தின் இயக்கம், எல்லாம் மெய்மறக்க வைத்தது. 

சித்தார்த்: பாஸ் என்றால் பாஸ் தான். இதை தவற விடாதீர்கள்.

குஷ்பூ: மணிரத்னத்தின் தரத்தை ஒவ்வொரு காட்சியும் சொல்கிறது. பாராட்ட வார்த்தையே இல்லை. ஆசானின் காவியம் இது. ஒவ்வொரு நடிகரும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். ரஹ்மான், சந்தோஷ் சிவன் தலை வணங்குகிறேன்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close