[X] Close

'96' படத்துக்கான எதிர்பார்ப்பால் பயம்: விஜய்சேதுபதி


vijaysethupathi-speech-at-96-press-meet

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 19:37 pm
  • அ+ அ-

'96' படத்துக்கான எதிர்பார்ப்பால் பயமாக இருக்கிறது என்று பத்திரிகையாளர் சந்திப்பில்  விஜய்சேதுபதி தெரிவித்தார்.

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘96’. அக்டோபர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (செப்.29) நடைபெற்றது. 

இச்சந்திப்பில் விஜய்சேதுபதி பேசியதாவது:

’96’ படம் இயக்குநர் ப்ரேம்குமாரிடமிருந்து தான் தொடங்கியது. அவர் கதைச் சொல்ல வருகிறார் என்றவுடன் அது என்னவாக இருக்கும் என்ற பயமிருந்தது. இப்போது அதை விட பயம் அதிகமாகியுள்ளது. 

’செக்கச்சிவந்த வானம்’ படத்துக்குக் கூட எதையும் எதிர்பார்க்காமல் வாருங்கள் என்று போட்டிருந்தேன். ஆனால், இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை பூர்த்தி செய்யும் என்று முழுமையாக நம்புகிறேன். ஆனாலும், ஒரு பயமிருக்கிறது. இப்போது படம் எப்படியாவது நன்றாக இருந்துவிடணும் என்ற பயம் அதிகாமியுள்ளது. அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கிறேன்.

இப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே ரொம்ப நிம்மதியாக வேலை பார்த்தோம். எப்படியென்றால் யாருக்கும் யார் மீதும் சந்தேகம் எழவில்லை. ரசித்து ரசித்து வேலை செய்தோம். இப்படத்தில் அனைவருக்குமே சமமான பங்கு இருக்கிறது. 

சினிமாவில் எங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. நன்றாக இருக்கோம். ஆனால், அனைவருமே நல்ல சம்பளம் வாங்குவதில்லை. அதையும் தாண்டி, நல்ல வேலையில் ஒரு மனநிம்மதி இருக்கிறது பாருங்கள். அது ஒரு சில படத்தில் தான் கிடைக்கும். இப்படத்தில் அனைவருக்குமே அந்த மனநிம்மதி கிடைத்தது. அது படத்தின் ஒவ்வொரு காட்சியிலுமே பிரதிபலிக்கும் என நம்புறேன். இப்படத்தின் கதையே ஒரு இரவில் நடப்பது தான். 

எனக்கு த்ரிஷாவைப் பார்த்தால் சின்ன வயதிலிருந்தே பயம். ஹோம் வொர்க் பண்ணவில்லை என்றால் அவருடைய படத்தைக் காட்டித் தான் அம்மா பயமுறுத்துவார். நாயகிகள் சின்ன வயதிலே நடிக்க வந்துவிடுகிறார்கள். நிஜத்தில் என்னைவிட சுமார் 7 வருடங்களாவது சின்ன பெண்ணாக இருப்பார் த்ரிஷா. 

இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close