[X] Close

என் வீட்டில் நடந்தது ரெய்டா? - விஜய்சேதுபதி விளக்கம்


vijaysethupathi-speech-at-96-press-meet

'96' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி பேசிய போது...

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 19:23 pm
  • அ+ அ-

தனது வீட்டில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு குறித்து ‘96’ பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்சேதுபதி விளக்கமளித்தார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக செய்திகள் பரவியது. ஏன், எதற்கு என்பதற்காக எந்தவொரு காரணமுமே அதிகாரப்பூர்வமாக செய்திகள் எதுவுமே வெளிவரவில்லை.

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘96’. அக்டோபர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (செப்.29) நடைபெற்றது. 

இந்நிலையில், ‘96’ பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்சேதுபதியிடம் ‘வருமான வரித்துறை’ சோதனை குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு விஜய் சேதுபதி கூறியதாவது:

என் வீட்டில் நடந்தது ரெய்டு அல்ல, அது சர்வே. என் மூஞ்சு இப்போ நிறைய இடத்துல வருது. அதனால் இவரு கணக்கு வைச்சுருக்கிறாரா இல்லயா, அவருக்கு கணக்கு எழுத வருதா என்று வைச்ச சர்வே தான் அது. பணத்தின் வரவு, செலவு எல்லாம் சரியாக இருக்கா என்று செக் பண்ணினார்கள். வருமானவரித்துறை சர்வே என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அதுவே எனக்கு இப்போது தான் தெரியும். 

கடந்த 3 ஆண்டுகளாக வருமான வரியை முன்பே கட்டியிருக்கிறேன். அதற்கான ரிட்டன்ஸை என் ஆடிட்டர் ஃபைல் பண்ணவில்லை. அவர் திடீரென்று போய் ஃபைல் பண்ணியிருக்கார். ஆகையால், உடனே வந்து எல்லாம் சரியாக இருக்கா என்று செக் பண்ணினார்கள். 

செய்தி தவறாக பரவினால் மட்டுமே அனைவரிடமும் போய் சேரும். அது ஒரு விளம்பரம் தான். தப்பாக பேசினால் மட்டுமே உடனே போய் சேரமுடியும். அது காசு கொடுத்தால் கூட கிடைக்காது. நம்மூரில் இப்போது கண்டதைப் பேசினால் தான் பப்ளிசிட்டி என்ற ட்ரெண்ட் இருக்கிறது. 
நம்மூரில் கண்டபடி கத்தி பேசிவிட்டு, அதை நான் பேசல எனது அட்மின் பேசினாரு, மிமிக்ரி பண்ணிவிட்டார்கள் என்று சொல்லலாம். முதலில் அவர் சோதனை நடத்தியது என் வீடு அல்ல. என் வீடு மாதிரி செட் போட்டு, செக் பண்ணியிருக்கிறார்கள். 

இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close