[X] Close

மும்தாஜ், பொன்னம்பலம் மிஸ்ஸிங்?


mumtaz-ponnambalam

பிக்பாஸ் - மும்தாஜ், பொன்னம்பலம்

  • வி.ராம்ஜி
  • Posted: 29 Sep, 2018 11:31 am
  • அ+ அ-

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது. கிட்டத்தட்ட பிக்பாஸ் 2 ஆரம்பித்த போது உள்ளே வந்து, பிறகு வெளியேறியவர்கள் எல்லோருமே நேற்று வந்துவிட்டார்கள். இதில் மும்தாஜும், பொன்னம்பலமும் மட்டும்தான் மிஸ்ஸிங். அவர்கள் இருவரும் இன்றைய தினம் வருவார்களா?

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கி, சுரத்தில்லாமல்தான் போய்க்கொண்டிருந்தது. அனந்த்வைத்தியநாதன், மமதி, ரம்யா, வைஷ்ணவி, மும்தாஜ், ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா, பாலாஜி, சென்றாயன், நித்யா, டேனியல், மஹத், ஷாரிக், பொன்னம்பலம் என 16 பேர் உள்ளே வந்தார்கள். ஜேஜே என்று களையுடன் இருந்தது பிக்பாஸ் வீடு.

அனந்த் வைத்தியநாதனும் மமதியும் ஆரம்பகட்டத்திலேயே வெளியேறினார்கள். ரம்யாவும் வைஷ்ணவியும் அடுத்தடுத்து, வெளியேறினார்கள். பிறகு பொன்னம்பலம் வெளியேறினார்.

நித்யா வெளியேறிய போது பாலாஜி கண்கலங்கினார். அதேபோல், ஷாரிக் வெளியேறினார். முன்னதாக மும்தாஜுக்கு அவர் கொடுத்த டார்ச்சர்களெல்லாம் நினைவுக்கு வந்தன. ஐஸ்வர்யாவுக்குத்தான் ஒருமாதிரியாகிவிட்டது.

மஹத் வெளியேறும்போதும் கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் சோகம் என்றிருந்தார்கள். இதனிடையே டேனியல் தடாலென வெளியேறினார். மறுநாளே தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அதேபோல அடுத்த வாரமே சென்றாயன் வெளியேறினார். இந்த சமயத்தில்தான் வைல்டு கார்டு மூலமாக விஜயலட்சுமி உள்ளே வந்தார்.  

மும்தாஜ் வெளியேறும் வரை, அவரின் அன்பு டிராமா என்று சொல்லப்பட்டது. பொய்யாக இருக்கிறார். நடிக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அவர் வெளியேறியதும் ஐஸ்வர்யா உட்பட பலரும் அழுதுவிட்டார்கள்.

பாலாஜியும் யாஷிகாவும் வெளியேறினார்கள். பாலாஜிண்ணா, பாலாஜிண்ணா என உருகினார்கள், யாஷிகாவின் வெளியேற்றத்தில் ஐஸ்வர்யா துவண்டுபோனார்.

இந்த நிலையில், பிக்பாஸின் இறுதிவாரமான இந்த வாரத்தில், வீடே கலகலவாகியிருந்தது. வைஷ்ணவியும் ரம்யாவும் வந்தார்கள். நித்யாவும் ஷாரிக்கும் வந்தார்கள், பாலாஜியும் யாஷிகாவும் வந்தார்கள். சென்றாயனும் மஹத்தும் வந்தார்கள். வீடு கொண்டாட்ட மூடுக்கு வந்து, கும்மாளம் போட்டது.

நேற்றைய தினம், அனந்த் வைத்தியநாதன், ஷாரிக், ரம்யா, மமதி, மஹத், யாஷிகா, பாலாஜி, நித்யா, சென்றாயன், வைஷ்ணவி என எல்லோரும் ஒருசேர வந்தார்கள். மகிழ்ந்து போனார்கள். மகிழ்வித்து மகிழ்ந்தார்கள்.

‘எல்லாரும் வந்துட்டாங்க. ஆனா மும்தாஜ் மேடமும் பொன்னம்பலம் சித்தப்பாவும் மட்டும் வரலியே...’ என்று ஏங்கித்தான் போனார்கள்.

இன்று  இப்படம் கடைசி என்பது போல, இன்று ஒருநாள்தான். நாளை ஞாயிற்றுக்கிழமை, நிறைவு நிகழ்ச்சி. பிக்பாஸ் வின்னர் அறிவிக்கும் நாள்.

இந்த நிலையில், மும்தாஜும் பொன்னம்பலமும் இன்று வருவார்களா என பிக்பாஸ் வீட்டார் போல நேயர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close