[X] Close

கமல் சார் ஒண்ணு கேக்கறாரு; இவரு ஒண்ணு சொல்றாரு! - அஞ்சுபொண்ணுங்களோட எப்படி தனியா இருந்தீங்க? - இது பிக்பாஸ் ரணகளம்


biggboss2

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Sep, 2018 20:57 pm
  • அ+ அ-

கமல் சார் ஒண்ணு கேக்கறாரு, இவரு ஒண்ணு சொல்றாரு என்று பிக்பாஸ் வீட்டில் மஹத்தும் யாஷிகாவும் ஐஸ்வர்யாவுடன் பேசிக்கொள்கிறார்கள். அநேகமாக டேனியலைச் சொல்லுகிறார்களா? என்று யோசிக்கிறார்கள் பிக்பாஸ் நேயர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்கள்தான். சனியும் ஞாயிறும்தான். ஞாயிறன்று பிக்பாஸ் வின்னர் யாரென்பது தெரிந்துவிடும்.

ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி இந்த நால்வரில் வின்னர் யார்? இது ஒருபக்கம் இருக்க, இந்த வாரம்  விருந்தினர்களால் பிக்பாஸ் வீடும் பிக்பாஸ் வீட்டாரின் மனசும் நிறைந்தே போனது.

வைஷ்ணவியும் ரம்யாவும் வந்த போது, அட என்று ஆச்சரியப்பட்டது. அவர்களுடன் மனம் விட்டுப் பேசியது. வெளியில் உள்ள பேச்சு பற்றி அவர்களும் பகிர்ந்துகொண்டார்கள்.

அடுத்ததாக, நித்யாவும் ஷாரிக்கும் வந்தார்கள். ஷாரிக் வந்ததும் ஐஸ்வர்யா ஒருமாதிரியாக நெளிந்து வளைந்து வெட்கப்பட்டுத்தான் போனார். ஆனால் ஷாரிக் உர்ரென்று இருந்தார். ஒருகட்டத்தில் ஏதோ கேட்க, ஐஸ்வர்யாவும் சொல்ல, சட்டென்று அந்த இடம் விட்டு நகர்ந்ததை எவருமே ரசிக்கவில்லை.

பாலாஜியும் யாஷிகாவும் வந்த போது வீடே அல்லோலகல்லோலப் பட்டது. யாஷிகாவைப் பார்த்ததும் அப்படியே கட்டிக்கொண்டார் ஐஸ்வர்யா. பாலாஜியை அண்ணா அண்ணா என உருகினார்கள் எல்லோருமே!

நேற்று சென்றாயன் வந்ததும் வீடே கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் போனது. ஷாரிக்கும் வந்திருந்தார்.

இதோ… இன்றைக்கு அனந்த் வைத்தியநாதனும் மமதியும் வருகிறார்கள் என தெரிவிக்கிறது பிக்பாஸ் ப்ரோமோ. அனந்த் வைத்தியநாதன் பேசும் போது, உங்களைப் பத்தி வெளியே நல்ல டாக் இருக்கு. எல்லாருமே நல்லா விளையாண்டீங்க. ஆனா எனக்கொரு சந்தேகம். இத்தனை நாள் உள்ளே எப்படி இருந்தீங்க? பைத்தியம் பிடிக்கலையா உங்களுக்கு?’ என்று அனந்த் வைத்தியநாதன் முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு கேட்டார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, அனந்த் வைத்தியநாதன், மமதி, மஹத், பாலாஜி, யாஷிகா என்று இன்று உள்ளே வருகிறார்கள். செம கலாய் கலாய்க்கிறார்கள். அப்போது மஹத், ஐஸ்வர்யா, யாஷிகா மூவரும் பேசிக்கொண்டிருக்க, கமல் சார் ஒண்ணு கேக்கறாரு; அவரு ஒண்ணு சொல்றாரு… என்று பேசிக்கொள்கிறார்கள். அது யாராக இருக்கும்? டேனியலா? சென்றாயனா?

அதேபோல, அனந்த் வைத்தியநாதன் பாலாஜியிடம், எப்படி அஞ்சு பொண்ணுங்க இருக்கற பிக்பாஸ் வீட்ல தனி ஆளா இருந்தீங்க? என்று கேட்கிறார்.

இன்னும் என்னென்ன சேட்டைகளெல்லாம் இன்றைக்கு இருக்கப் போகிறதோ?

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close