[X] Close

பைத்தியம் பிடிக்காம எப்படி இருக்கீங்க? பிக்பாஸ் வீட்டில் அனந்த்வைத்தியநாதன் ஆச்சரியம்


anandvaithyanathan-biggboss

பிக்பாஸ் - அனந்த் வைத்தியநாதன்

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Sep, 2018 19:05 pm
  • அ+ அ-

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்கள்தான். சனியும் ஞாயிறும்தான். ஞாயிறன்று பிக்பாஸ் வின்னர் யாரென்பது தெரிந்துவிடும்.

ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி இந்த நால்வரில் வின்னர் யார்? இது ஒருபக்கம் இருக்க, இந்த வாரம்  விருந்தினர்களால் பிக்பாஸ் வீடும் பிக்பாஸ் வீட்டாரின் மனசும் நிறைந்தே போனது.

வைஷ்ணவியும் ரம்யாவும் வந்த போது, அட என்று ஆச்சரியப்பட்டது. அவர்களுடன் மனம் விட்டுப் பேசியது. வெளியில் உள்ள பேச்சு பற்றி அவர்களும் பகிர்ந்துகொண்டார்கள்.

அடுத்ததாக, நித்யாவும் ஷாரிக்கும் வந்தார்கள். ஷாரிக் வந்ததும் ஐஸ்வர்யா ஒருமாதிரியாக நெளிந்து வளைந்து வெட்கப்பட்டுத்தான் போனார். ஆனால் ஷாரிக் உர்ரென்று இருந்தார். ஒருகட்டத்தில் ஏதோ கேட்க, ஐஸ்வர்யாவும் சொல்ல, சட்டென்று அந்த இடம் விட்டு நகர்ந்ததை எவருமே ரசிக்கவில்லை.

பாலாஜியும் யாஷிகாவும் வந்த போது வீடே அல்லோலகல்லோலப் பட்டது. யாஷிகாவைப் பார்த்ததும் அப்படியே கட்டிக்கொண்டார் ஐஸ்வர்யா. பாலாஜியை அண்ணா அண்ணா என உருகினார்கள் எல்லோருமே!

நேற்று சென்றாயன் வந்ததும் வீடே கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் போனது. ஷாரிக்கும் வந்திருந்தார்.

இதோ… இன்றைக்கு அனந்த் வைத்தியநாதனும் மமதியும் வருகிறார்கள் என தெரிவிக்கிறது பிக்பாஸ் ப்ரோமோ. அத்துடன் இன்றைய தினமும் பாலாஜியும் மஹத்தும் வருகிறார்கள். அனந்த் வைத்தியநாதன் பேசும் போது, உங்களைப் பத்தி வெளியே நல்ல டாக் இருக்கு. எல்லாருமே நல்லா விளையாண்டீங்க. ஆனா எனக்கொரு சந்தேகம். இத்தனை நாள் உள்ளே எப்படி இருந்தீங்க? பைத்தியம் பிடிக்கலையா உங்களுக்கு?’ என்று அனந்த் வைத்தியநாதன் முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு கேட்டார்.

இன்னும் என்னெல்லாம் கேக்கப் போறாரோ அனந்து?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close