[X] Close

பின்விளைவுகளை யோசிக்காமல் தனுஸ்ரீக்காக துணை நிற்போம்!- ரவீனா டேண்டன்


it-s-time-witnesses-came-forward-and-stood-by-her-unafraid-of-the-consequences

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Sep, 2018 15:24 pm
  • அ+ அ-

பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவுக் குரல் பெருகி வருகிறது.

பாலிவுட் நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறியுள்ளார்.

இது குறித்து  நடிகை ரவீனா டேண்டன் தனது ட்விட்டரில், "துறை சார்ந்தவர்களுக்காகவே குரல் கொடுக்கத் தவறினோம் என்றால் தவறு செய்பவர்களுக்கு தைரியம் துளிர்த்துவிடும். நாம் பெண்கள் மேம்பாடு தொடர்பாக எடுக்கும் படங்கள் எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும். தனுஸ்ரீ தத்தா விவகாரத்தில் காதற்றவர்கள் போல் நாம் காட்டும் மவுனம் வருத்தமளிக்கிறது.

ஆதாரம் இல்லை என ஒதுக்கிவிட முடியாது. தனுஸ்ரீக்கு இந்த சம்பவம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. நானும் நானாவுடன் பணியாற்றியிருக்கிறேன். அவருக்கு முன் கோபம் வரும் என கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால் அதை நான் அனுபவித்ததில்லை. என்னிடம் அவர் மிகவும் பாங்காகவே நடந்து கொண்டார்.

இன்று சமூக வலைதளங்கள் எல்லாம் வந்துவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக வதந்திகளைப் பரப்பும் சில பத்திரிகைகள் இருந்தன. அதில் வரும் தலைப்புகளை நாமும் நம்பினோம். ஆனால், இன்று சமூக ஊடகங்கள் இருக்கின்றன. நாம் இவ்விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர வேண்டிய நேரமும் வந்துவிட்டது. 

நடந்து சம்பவத்தை அறிந்தவர்கள் பின்விளைவுகளை யோசிக்காமல் தனுஸ்ரீக்காக துணை நிற்போம். சட்டம் தனது கடமையை செய்யட்டும். உண்மை வெளிவரும் வரையில் நாமாக யாரையும் சீர்தூக்கி பார்க்க வேண்டாம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close