[X] Close

அவள் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள்!- தனுஸ்ரீ தத்தாவுக்கு சித்தார்த் ஆதரவு


siddharth-supports-tanusree-dutta

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Sep, 2018 14:46 pm
  • அ+ அ-

பாலியல் வன்கொடுமை குறித்து ஒரு பெண் கூறினாள் அதை காது கொடுத்துக் கேளுங்கள் மாறாக அவளை அசிங்கப்படுத்தாதீர்கள் என தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கிறார் நடிகர் சித்தார்த்.

பாலிவுட் நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறியுள்ளார்.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப்பின் சொல்வது ஏன் என தனுஸ்ரீ தத்தாவை தரக்குறைவாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.

இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டரில், "ஒரு பெண் தனக்கு நேர்ந்த வன்கொடுமையைப் பற்றி சொன்னால் காது கொடுத்துக் கேளுங்கள். அவளுக்கு அந்த கொடுமை அரங்கேறி 50 ஆண்டுகளுக்குப் பின்னால் சொன்னாலும்கூட கேளுங்கள். ஏன் அவள் மரணப்படுக்கையில் அதை சொன்னாலுகூட கேளுங்கள். அவளை வெட்கித் தலை குனிய வைக்காதீர்கள். தவறு செய்யாத ஆணாக இருந்தால் தானாகவே பழியில் இருந்து தப்பித்துக் கொள்வான்.

ஒரு பெண் தனக்கு நேர்ந்த வன்கொடுமையை வெளியில் சொல்வது என்பதே எத்தனை மனவேதனையை உருவாக்கும் தெரியுமா? அப்படிச் சொல்லும் போது அதை பொதுவெளியில் பலரும் பகுப்பாய்வு செய்வார்கள். இதையும் கூட சிலர் மூடர்கள் அந்தப் பெண் கவன ஈர்ப்புக்காக அதை செய்கிறார் என்று சொல்லலாம்."  எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close