[X] Close

படம் பார்த்துட்டு சொல்லுங்க தப்பிருந்தா திருத்திக்கிறேன்: 'சிம்டாரங்காரன்' பாடலாசிரியர்


lyricist-vivek-responds-for-sarkar-song

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 13:35 pm
  • அ+ அ-

’சர்கார்’ பாடலுக்கு சமூகவலைத்தளத்தில் எழுந்த கிண்டலுக்கு, பாடலாசிரியர் விவேக் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, வரலெட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பாடல்களை விவேக் எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.

படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவின் முன்னோட்டமாக, ‘சிம்டங்காரன்’ என்ற பாடலை மட்டும் படக்குழு வெளியிட்டது.

இதற்கு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது படக்குழு. சமூகவலைத்தளத்தில் பலரும் இது பாடலா, இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையா என்று பலரும் விமர்சித்தார்கள். 

இந்நிலையில் இது தொடர்பாக ‘சிம்டங்காரன்’ எழுதிய பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

சிம்டாங்காரன் பாடலில் எனது பணி குறித்து வெளியான நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களைப் படித்தேன். சென்னை தமிழை நான் புகுத்தியதன் எனது எண்ண பின்னணியைப் புரிந்து கொண்டவர்களுக்கு நண்றி. பாடல் வரிகளை வெறுத்தவர்களின் உணர்வுகளையும் நான் மதிக்கிறேன்.

எனக்கு ஆதரவாக துணை நின்ற விஜய் ரசிகர்களின் அன்பு உலகை விஞ்சி நிற்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் விஜய்யின் ஸ்டார் பவரும் எனது பாடல் வரிகளை மந்திரம் போட்டு எங்கோ கொண்டு சென்று விட்டது. இந்த தருணத்தில் அவர்கள் இருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாடல் ஒரு கோடி பார்வைகளைக் கடந்திருக்கிறது.

நான் எப்போதுமே விமர்சனங்களைக் கண்டு அஞ்சி ஓடியதில்லை. என்னை ட்ரோல் செய்தவர்கள் நிலையில் நின்று நான் என்னைப் பார்க்க முயற்சிக்கிறேன். நீங்கள் படம் வெளியானதும் படத்தைப் பாருங்கள். அப்போதும் கூட உங்களுக்கு பாடல் வரிகளில் சிக்கல் இருந்தது என்று உணர்ந்தீர்கள் என்றால் சொல்லுங்கள். எதிர்காலத்தில் எனது வேலையை நான் சரி செய்து கொள்கிறேன். நான் உங்களுக்கு அன்பையே அளிக்க விரும்புகிறேன்

இவ்வாறு விவேக் தெரிவித்திருக்கிறார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close