[X] Close

சபரிமலை தீர்ப்பு பாலின சமத்துவத்துக்கான மாபெரும் வெற்றி: ராஜீவ் மேனன்


sabarimalai-verdict-rajiv-menon

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Sep, 2018 12:56 pm
  • அ+ அ-

சபரிமலை தீர்ப்பு பாலின சமத்துவக்கான மாபெரும் வெற்றி என இயக்குநர் ராஜீவ் மேனன் கூறியிருக்கிறார். பக்தியை பாலின பாகுப்பாட்டல் ஒடுக்க முடியாது அனைத்து வயது பெண்களும் இனி சபரிமைக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து பல்துறை பிரபலங்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து மதத்தினரும், அனைத்து ஜாதியினரும் சபரிமலைக்குள் அனுமதிக்கபப்டுகின்றனர். ஆனால், பெண்கள் மீதான பாகுபாடு மட்டும் ஒரு நீண்ட சர்ச்சையாக இருந்தது. உச்ச நீதிமன்றம் தனது துணிச்சலான தொலைநோக்கு பார்வையை நிரூபித்துள்ளது. நாட்டில் பாலின சமத்துவத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close