[X] Close

சபரிமலை தீர்ப்புக்கு மதச்சாயம் பூசாதீர்கள்!- குஷ்பு


khusbhu-on-sabarimala-verdict

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Sep, 2018 12:33 pm
  • அ+ அ-

சபரிமலை வழக்கில் அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு மதச்சாயம் பூசாதீர்கள் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தீர்ப்பை அவர் வரவேற்றிருக்கிறார். எந்த ஒரு மதமும் பெண்ணின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கவில்லை எனப் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "சபரிமலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு மதச்சாயம் பூசுபவர்கள் வெட்கப்பட வேண்டும்.  ஒருவனே தேவன். இதை நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்கள் என்றால் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வீர்கள். மதவெறி கொண்ட பெண் வெறுப்பாளர்கள்தான் வேறு மாதிரி சிந்திப்பார்கள். பெண்களை அடிமைப்படுத்துவதற்காக போலித்தனமான வழக்கங்களைக் கொண்டுவந்து அசிங்கமாக செயல்படுவார்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

சபரிமலை தீர்ப்பு செய்தியை பகிர்ந்த குஷ்புவிடம் நெட்டிசன் ஒருவர், "சபரிமலை வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டதால் இனி உங்களைப் போன்றோர் மசூதிகளில் அனைத்து நாட்களிலும் பெண்கள் தொழுகை நடத்த அனுமதி கேட்டு பிரச்சாரம் செய்வீர்களா?" என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே குஷ்பு இப்பதிவை வெளியிட்டுள்ளார். 

முன்னதாக பக்தியை பாலின பாகுப்பாட்டல் ஒடுக்க முடியாது அனைத்து வயது பெண்களும் இனி சபரிமைக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close