[X] Close

முடியப் போகுது பிக் பாஸ்: கவலையில் ரசிகர்கள்!


bigg-boss-fans-worry

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 12:20 pm
  • அ+ அ-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ, ‘பிக் பாஸ் 2’ 90 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா, பாலாஜி, ரித்விகா, அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், சென்றாயன், டேனியல், மஹத், வைஷ்ணவி, மும்தாஜ், ஷாரிக் ஹாசன் ஆகியோர் போட்டியாளர்களாகக் களமிறங்கினர்.

பின்னர் வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு தற்போது ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர்.

வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். ஆனால், அன்று திங்கட்கிழமை என்பதால், 6 நாட்கள் கூடுதலாகச் சேர்த்து மொத்தம் 106 நாட்களுக்கு ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பாகி வருகிறது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் 2 இறுதிப்போட்டி ஒளிபரப்பாகும். அதன்பிறகு இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே என பிக் பாஸ்’ ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர் . கடந்த 100 நாட்களுக்கும் மேலாக சரியாக இரவு 9 மணிக்கு டிவி முன் அமர்ந்து ‘பிக் பாஸ்’ பார்க்கத் தொடங்கிய ரசிகர்களுக்கு, இனிமேல் 9 மணி வந்தாலே ‘பிக் பாஸ்’ நினைவு வந்துவிடும்.

பொதுவாக, ஒரு வாரம் பழகினாலே தங்கள் மனதுடன் நெருக்கமாக்கிக் கொள்வார்கள் தமிழ் மக்கள். அதனால் தான், இங்கு ஒரு சீரியலை ஏழெட்டு வருடங்கள் கூட இழுக்க முடிகிறது. அப்படி இருக்கையில், 106 நாட்கள் குடும்பத்தில் ஒன்றாக மாறிப்போன ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடியப் போகிறது என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருக்கத்தானே செய்யும்!

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close