[X] Close

பொங்கலுக்கு வருகிறது ரஜினியின் ’பேட்ட’?


petta-release-date

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 12:10 pm
  • அ+ அ-

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘பேட்ட’ படம் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா, நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. முன்னாள் ராணுவ வீரராக இருந்து, ஹாஸ்டல் வார்டனாக வேலை செய்பவராக ரஜினி நடிக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘பேட்ட’ படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில், இந்தப் படத்தைப் பொங்கல் விடுமுறையில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close