[X] Close

கை கொடுக்குமா சர்கார்? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்


fans-expectation-abt-sarkar

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 12:02 pm
  • அ+ அ-

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படம், சன் பிக்சர்ஸுக்கு கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு கலாநிதி மாறனால் தொடங்கப்பட்ட நிறுவனம் சன் பிக்சர்ஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. முதன் முதலில்  ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் விநியோகத்தைத் தொடங்கிய சன் பிக்சர்ஸ், ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி தியேட்டர்களை வளைத்துப்போட்டு, பெரும்பாலான பெரிய படங்களை வாங்கி ரிலீஸ் செய்தது.

திமுக ஆட்சியில் இருந்த 2008 முதல் 2011-ம் ஆண்டு வரை ஏகப்பட்டப் படங்களை வாங்கி ரிலீஸ் செய்தது ‘சன் பிக்சர்ஸ்’. ஆனால், ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ என்ற ஒரே ஒரு படத்தை மட்டும்தான் சொந்தமாகத் தயாரித்தது.

பின்னர் ஆட்சி மாறிய பிறகு, சன் பிக்சர்ஸ் சத்தமில்லாமல் அமைதியானது. வருடத்துக்கு ஒரு படம் கூட வெளியிடவில்லை. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது.

விஜய் நடிப்பில் ‘சர்கார்’, ரஜினி நடிப்பில் ‘பேட்ட’, ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘காஞ்சனா 3’ ஆகிய படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். 

சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் 3 படங்களில், முதலில் வெளியாக இருப்பது ‘சர்கார்’. வருகிற தீபாவளி விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸைப் பொறுத்தவரை, இது கிட்டத்தட்ட ரீஎன்ட்ரி மாதிரி. பழைய மாதிரி அசுர பலத்துடன் களமிறங்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. எனவே, சன் பிக்சர்ஸுக்கு கைகொடுக்குமா‘சர்கார்’? என்ற கேள்வி எழுந்துள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close