[X] Close

பிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் யாஷிகா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி..!!


yashika-in-nota-pressmeet

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 11:49 am
  • அ+ அ-

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகவுள்ள ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட யாஷிகா கலந்து கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, சென்றாயன், ரித்விகா, மும்தாஜ், பாலாஜி, மமதி சாரி, நித்யா, ஷாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா, விஜயலட்சுமி ஆகிய 17 பேர் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

வாரம் ஒருவர் என வெளியேற்றப்பட்டு தற்போது அதில், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர். வருகிற ஞாயிற்றுக்கிழமை  இந்த சீஸனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

கடந்த வார எலிமினேஷனில் யாஷிகா மற்றும் பாலாஜி இருவரும் ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு யாஷிகா கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது. ‘நோட்டா’ படத்தில் யாஷிகா நடித்திருப்பதால், இந்த சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். 

ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close