[X] Close

சிம்பு விசாரிச்சாரு ஐஸ்வர்யா; அவரோட படத்துல உனக்கு சான்ஸ்! - சென்றாயன் தகவலில் ஐஸ்வர்யா ஆட்டம்


simbu-iswarya-senrayan

சிம்பு - ஐஸ்வர்யா

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Sep, 2018 11:28 am
  • அ+ அ-

சிம்பு விசாரிச்சாரு ஐஸ்வர்யா;

அவரோட படத்துல உனக்கு சான்ஸ்!

- சென்றாயன் தகவலில் ஐஸ்வர்யா ஆட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சி நூறுநாட்களைக் கடந்தும் போய்க்கொண்டிருக்கிறது எக்ஸ்ட்ரா ஐந்து நாளில், இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.

இந்த வாரம் முழுக்கவே, போட்டி, பொறாமை, ஈகோ, சண்டை, காட்டுக்கத்தல், ஸ்ட்ரேடஜிக்கெல்லாம் வேலையே இல்லை. பிக்பாஸ் வீட்டில் உள்ள ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி, ஜனனி ஆகிய நான்குபேரையும் ரிலாக்ஸ்டாக இருக்கவைத்துவிட்டார்கள். நூறுநாள் டார்கெட் முடிந்தது என்பதால் இப்படி வைத்தார்களா என்று தெரியவில்லை.

இதுவும் நல்லதுக்குத்தான். ஆனால் அந்த நான்குபேர் சும்மாவே இருந்தால் எப்படிப் பார்ப்பது?

ஆகவே, பிக்பாஸ் 2வில் இருந்து வெளியேறியவர்களை தினமும் இரண்டு பேர் என்கிற கணக்கில், உள்ளே அனுப்பி, எனர்ஜி ஏற்றிக்கொண்டே இருக்கிறார் பிக்பாஸ்.

வைஷ்ணவியும் ரம்யாவும் வந்தார்கள். ஷாரிக்கும் நித்யாவும் வந்தார்கள். பிறகு பாலாஜியும் யாஷிகாவும் வந்தார்கள். இதில் பாலாஜியும் யாஷிகாவும் வந்தபோது வீடே அதகளமானது. செம ஆட்டம் போட்டது. யாஷிகாவை ஐஸ்வர்யா நான்கைந்து கட்டிக்கொண்டு உருகினார். சின்னக்குழந்தை போல துள்ளிக் குதித்தார்.

இதையடுத்து, நேற்றைய தினம் சென்றாயனும் மஹத்துக்கும் வந்தார்கள். சென்றாயன் தனக்கே உரிய பாணியில் நன்றாகை கையை காலை நீட்டிக்கொண்டு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக நடந்து வந்ததிலேயே பிக்பாஸ் நேயர்கள் குஷியாகியிருப்பார்கள்.

முதலில் இங்கேயும் அங்கேயும் சென்றவர், யாருடனும் பேசவில்லை. சென்றாயன் அண்ணா சென்றாயன் அண்ணா என்று எல்லோரும் கூப்பிட்டுக்கொண்டே இருக்க, பேசவே இல்லை சென்றாயன். அப்புறம்தான் பேசினார்.  

‘எல்லாருக்கும் எவ்ளோ நல்லபேரு இருக்கு தெரியுமா? ஐஸூ... உனக்கெல்லாம் அவ்ளோ நல்ல பேரு இருக்கு. எதுக்கும் கவலைப்படாதே. எதையும் நம்பாதே. அவ்ளோ நல்லபேரு எடுத்துவைச்சிருக்கே ஐஸூ...’ என்று சொல்ல, கலங்கி அழுதேவிட்டார் ஐஸ்வர்யா. அவரை ரித்விகாவும் ஜனனியும் ஆறுதல்படுத்தினார்கள்.

பிறகு சென்றாயன் ஐஸ்வர்யாவிடம் சொன்னதுதான் ஹாட் டாபிக். சொல்லப்போனால், ஐஸ்வர்யாவுக்கு ஸ்வீட் ஹாட் நியூஸ்.

‘வெளியே போன உடனேயே சிம்புவைப் போய்ப் பாத்தேன். உன்னை ரொம்பப் பாராட்டினார் ஐஸ்வர்யா. ரொம்பவே விசாரிச்சாரு’ என்று சொல்ல, அதையே ஐஸ்வர்யாவால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவரின் கால், தரையிலேயே நிற்கவில்லை.

இரண்டு நிமிடம் கேப் விட்டு, மீண்டும் பேசினார் சென்றாயன். ‘இன்னொரு முக்கியமான, சூப்பரான விஷயம் சொல்லட்டுமா?அடுத்த படம் பண்றாரு சிம்பு. அதுல உனக்கு சான்ஸ் தர்றதா சொல்லிட்டிருந்தாரு’ என்று சொல்ல... பெருங்கூச்சல் போட்டு மகிழ்ந்தார் ஐஸ்வர்யா.   ‘நெஜமாவா... நெஜமாவா...’ என்று நம்பமுடியாமல் குதித்தார்.

என்ன... என்ன.,.. என்று எல்லோரும் ஓடிவந்து கேட்டார்கள். விஷயம் சொல்ல... ‘நான் அப்பவே நினைச்சேன் ஐஸ்வர்யா. கண்டிப்பா, உனக்கு பெரிய வாய்ப்பு வரும்னு நினைச்சேன்’ என்று ஜனனி சொல்ல, பிக்பாஸ் வீடே உற்சாகத்தில் திளைத்தது.

சிம்பு சொன்னாரா... தெரியவில்லை. சென்றாயன் அள்ளிவிடுகிறாரா... அதுவும் தெரியவில்லை. ஆனால் சிம்பு சொல்லாமலா சென்றாயன் சொல்லியிருப்பார்?

அப்புறமென்ன... ஐஸ்வர்யா... ட்ரீட் இல்லையா? என்று பிக்பாஸ் நேயர்கள் ஐஸ்வர்யாவுக்கு ட்வீட் போட்டாலும் ஆச்சரியமில்லை.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close