[X] Close

420 கிரிமினல் குற்றமென்றால் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவும் குற்றமே!- கஸ்தூரி


breach-of-contract-is-a-civil-wrong-that-can-lead-to-criminal-action

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Sep, 2018 10:24 am
  • அ+ அ-

சட்டப்பிரிவு 420-ன் படி ஏமாற்றுவது கிரிமினல் குற்றமென்றால் திருமண பந்தத்தின் நம்பிக்கையை உடைத்து வெளியே உறவு கொள்வதும் குற்றமே என நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.

திருமண பந்தத்தை மீறிய உறவை குற்றமாகக் கருதும் சட்டப்பிரிவு பாலின பாகுபாடின்றி இரு பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும் என உத்தரவிட்டிருக்க வேண்டும். அதற்கு பதில் இத்தகைய உறவு குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல என நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.

திருமண பந்தத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சட்டப்பிரிவு 497-ஐ ரத்து செய்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தும் வரும் நிலையில் நடிகை கஸ்தூரி அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் பதிவிட்ட ட்வீட்களில், "இந்த தீர்ப்பு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சட்டப்பிரிவு 497 என்பது சட்டத்தை சமமாக வழங்குவதாக இல்லை. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு பதிலாக மாண்புமிகு நீதிமன்ற பெண்கள் வழக்கு தொடர ஏதுவாகவும் பெண்கள் மீதும் வழக்கு தொடரும் வகையிலும் திருத்தியிருக்க வேண்டும்.

கிரிமினல் குற்ற வளையத்துக்குள் பெண்களையும் கொண்டு வருவதற்குப் பதிலாக ஆண்கள் மீது வழக்கு தொடர இருந்த வாய்ப்பையும் அல்லவா உச்ச நீதிமன்றம் பறித்திக்கிறது.

திருமணம் என்பது சமூக ஒப்பந்தம் என்றால் ஒப்பந்தத்தை மீறுவது சமூக குற்றம். இது கிரிமினல் வேலைகளில் ஈடுபடவே வழி வகுக்கும். ஏமாற்றுதல் என்பது கிரிமினல் குற்றம் என்றால் நம்பிக்கையை உடைத்து திருமணத்துக்கு அப்பாற்பட்டு உடலுறவு கொள்வதும் குற்றமே" எனப் பதிவிட்டிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close