[X] Close

ஆடையை விமர்சித்த ரசிகர்கள்.. .பதிலடி கொடுத்த சமந்தா!!


samantha-reply-to-fans

  • kamadenu
  • Posted: 27 Sep, 2018 17:17 pm
  • அ+ அ-

நடிகை சமந்தா நடித்த 'சீமராஜா', 'யூ டர்ன்' ஆகிய திரைப்படங்கள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகின. இதில் 'யூ டர்ன்' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தனது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு நாக சைத்தன்யாவுடன் சுற்றுலாவுக்கு சென்றிருக்கிறார் சமந்தா.

சுற்றுலாவின் போது கணவர் எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். அதன் பின்னோட்டத்தில் பலரும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். ‘திருமணமான பெண் இப்படி உடையணியலாமா’, ‘அக்கினேனி குடும்பத்து மருமகளா இப்படி’ என்று  தெரிவித்து இருந்தார்கள். அப்புகைப்படங்களை வைத்து மீம்களும் பரவ தொடங்கின. 

இதற்கு சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அவருடைய பதிவில் “என்னை திருமணத்திற்கு பிறகு இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று கூறும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்று பதிவிட்டு அடுத்த படத்தில் நடுவிரல் உயர்த்தி காட்டும் படமொன்றை பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிலுக்கு பல்வேறு திரையுலகினரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close