[X] Close

”நண்பர்களின் உதவியின்றி ஐஸ்வர்யா விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தேன்” - காயத்ரி ரகுராம் 


gayathri-about-aishwarya

  • kamadenu
  • Posted: 27 Sep, 2018 16:17 pm
  • அ+ அ-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசன் தனது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 

முதல் வாரத்தில் மும்தாஜ், ஆனந்த் வைத்தியநாதன், வைஷ்ணவி, சென்றாயன் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் களமிறங்கினர். 

பின்னர் வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு தற்போது ஐஸ்வர்யா,ஜனனி,ரித்விகா, விஜயலட்சுமி ஆகிய 4  பேர் மட்டுமே உள்ளனர். இந்த வார இறுதியில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு முந்திய சீசன் போட்டியாளர்களில் ஒருவரான ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ””நம் தமிழ்  பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே!!  நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளராக கொண்டாடுவோம்!” என்று மறைமுகமாக ஐஸ்வர்யாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் கடந்த சீசனில் நெட்டிசன்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட காயத்ரி ரகுராம்  தனது ட்விட்டர் பக்கத்தில் “டாஸ்க்குகளை நண்பர்களின் உதவியின்றி ஐஸ்வர்யா விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பிக் பாஸ் இந்த வாரம் அவர்களுக்கு மிகவும் எளிமையான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார். எப்படியோ சிறந்த போட்டியாளர் இறுதியாக வெல்வார்” என்று கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close