[X] Close

அழுத மஹத்… உருகிய பிக்பாஸ் டீம்!


mahath-senrayan

மஹத்

  • வி.ராம்ஜி
  • Posted: 27 Sep, 2018 16:11 pm
  • அ+ அ-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று மஹத்தும் சென்றாயனும் வருகிறார்கள். சென்றாயனுக்கு ஏக வரவேற்பு கொடுத்தார்கள் அவரின் பிக்பாஸ் நண்பர்கள். மஹத்தும் பேசும் போது, அழுதேவிட்டார். அதைக் கண்டு உருகிப் போனார்கள் எல்லோரும்.

பிக்பாஸ் வருகிற ஞாயிற்றுக்கிழமையுடன் முடிகிறது. இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இந்த வாரம் முழுக்கவே விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டியது.

நித்யாவும் ஷாரிக்கும் வந்தார்கள். நித்யாவிடம் மனம் விட்டு எல்லோரும் பேசினார்கள். போஷிகா பற்றியும் பாலாஜி அண்ணா பற்றியும் கேட்டார்கள். ஷாரிக், ஐஸ்வர்யாவிடம் பேசினார். ஆனால் மனதில் இருந்து பேச வந்தபோது விருட்டென்று விலகியது, பிக்பாஸ் நேயர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான்.

வைஷ்ணவியும் ரம்யாவும் வந்தார்கள். எல்லோரும் பேசிக் குதூகலித்துக் கொண்டார்கள். நேற்று யாஷிகாவும் பாலாஜியும் வந்தார்கள். அப்போதுதான், வீடு இன்னும் கொண்டாட்ட மூடுக்கு வந்தது. அண்ணா அண்ணா என பாலாஜியை பாசம் காட்டி, நெகிழவைத்தார்கள். யாஷிகா வந்தபோது ஐஸ்வர்யா கட்டிக்கொண்டார். விடவே இல்லை.

ஆட்டம்பாட்டம், ஜாலி டாஸ்க்கில் கேலி நையாண்டி என பொழுதுபோனது அவர்களுக்கு.

’நாய் குரைக்கிற சத்தம் கேட்டுச்சு. டேய் யாருடா தூங்குறதுன்னு கேட்டேன் என்று ரகளை பண்ணினார் பாலாஜி. ‘தோள்ல மைக் இருக்கற மாதிரியே ஒரு உணர்வு. யாராவது இங்கிலீஷ்ல பேசினா, சைலண்டாயிருவேன் என்று யாஷிகா சொன்னார்.

பிறகு இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.

இன்றைக்கு, சென்றாயனும் மஹத்தும் பிக்பாஸ் வீட்டுக்கு வருகிறார்கள். வழக்கம் போல, தன்னுடைய ஸ்டைலில், நடையில் வந்து கலக்கினார் சென்றாயன். ‘ஐஸு… உனக்கு வெளியே எவ்ளோ நல்ல பேரு தெரியுமா?’ என்று சொல்ல, ஐஸ்வர்யா நெகிழ்ந்து அழுதேவிட்டார்.

அதேபோல, மஹத்தும் உள்ளே நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமா, செம மாஸ். சில சமயங்களில் அழுதுவிட்டேன். ஏண்டா அழுவுறேன்னு அம்மா கேட்டாங்க. அக்கா கேட்டாங்க. ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டேன். ஆனா மும்தாஜ் மேமெல்லாம் என்ன பாடு படுத்தியிருக்கோம்னு அப்புறம் தெரிஞ்சுதான் வருத்தப்பட்டேன்.

எல்லாருமே நல்லா விளையாண்டீங்க என்று மஹத் சொல்லிவிட்டு அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்துவிட்டார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close