[X] Close

பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் புதிய பாதை!- சித்தார்த் பாராட்டு


pariyerumperumal-begins-a-bright-new-journey-in-tamilcinema

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Sep, 2018 14:09 pm
  • அ+ அ-

பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் புதிய பாதை எனப் பாராட்டியிருக்கிறார் நடிகர் சித்தார்த்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்திருக்கின்றனர். பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது.

இப்படத்தை பற்றி சித்தார்த் தனது ட்விட்டரில், "பரியேறும் பெருமாள் படம் தமிழ் சினிமாவின் சுடர்விடும் புதிய பயணத்தை தொடக்கி வைத்திருக்கிரது. மாரி செல்வராஜின் இயக்கம் சிறப்பு. நிஜத்திலிருந்து தழுவப்பட்ட அரிதான திரைப்படம். இப்படம் என்னை ஆழமாக பாதித்தது. படம் முடிந்த பின்னரும் பல மணி நேரம் என்னுடன் பயணித்தது. கதிரின் நடிப்பு உணர்ச்சிபூர்வமானது. நீங்களும் பாருங்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக பரியேறும் பெருமாள் படத்துக்கு ஆதரவாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்தார். இதுபோல் அனைவரும் தங்களது செல்லப்பிராணிகளுடனான படத்தைப் பகிர்ந்து பரியேறும் பெருமாளுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தனது மற்றொரு பதிவில் “ கதிர், ஆனந்தி, யோகி பாபு, கருப்பி மற்றும் ஒட்டு மொத்த நடிகர்கள், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் மற்றும் பரியேறும் பெருமாள் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி. இது போன்றதொரு உணர்வை நீண்ட நாட்களுக்கு பிறகு உணர்கிறேன். மாரி செல்வராஜு அவரது குழுவினரும் கொண்டாடப்படுவார்கள். இவ்வாறு சித்தார்த் குறிப்பிட்டுள்ளார். 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close