[X] Close

ஐஸூ... உனக்கு அவ்ளோ நல்லபேரு ஐஸூ - சென்றாயன் சொல்ல ஐஸ்வர்யா நெகிழ்ச்சி


iswarya-senrayan

பிக்பாஸ் வீடு - சென்றாயன்

  • வி.ராம்ஜி
  • Posted: 27 Sep, 2018 13:57 pm
  • அ+ அ-

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய வெள்ளி, சனி, ஞாயிறு என இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இந்த வாரம் முழுக்கவே விருந்தினர்களின் வருகையும் அன்பும் பாசமும் என வழிந்தது, பிக்பாஸ் வீட்டில்.

நித்யாவும் ஷாரிக்கும் வந்தார்கள். வீடு குதூகலமானது. முன்னதாக வைஷ்ணவியும்  ரம்யாவும் வந்தார்கள். கொண்டாடினார்கள். அதேபோல பாலாஜியும் யாஷிகாவும் வீட்டையே அதகளம் பண்ணினார்கள். அதிலும் ஆல் தோட்ட பூபதிக்கு யாஷிகா குத்தாட்டம் போட்டார். எல்லோருமே உற்சாகத்தில் ஆடினார்கள்.

பாலாஜி, விஜயகாந்த் ரேஞ்சுக்கு கால் வரையான கருப்புக் கோட்டும் கண்ணாடியுமாய் வந்திருந்தார். நெருப்புடா... என்று அவர் நடந்ததை ரசித்தார்கள் பலரும்.

பாலாஜி ஐஸ்வர்யாவாக மாற, ரித்விகா பாலாஜியாக மாற, குப்பை கொட்டும் சம்பவம் மீண்டும் கொட்டப்பட்டது. ஆனால் இந்த முறை எல்லோருமே சிரித்தார்கள்.

இந்தவேளையில், இன்று சென்றாயனும் மஹத்தும் பிக்பாஸ் வீட்டுக்கு வருகிறார்கள் என ப்ரோமா காட்டப்படுகிறது.

சென்றாயனை , பிக்பாஸ் வீடும் ரசிகர்கூட்டமும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறது. வெள்ளந்தியான அந்த மனிதரை எல்லோருக்குமே பிடித்தது. தவிர, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களின் குடும்பத்தில் இருந்து யார் வந்த போதும், முதல் ஆளாக ஓடிச் சென்று, வரவேற்று, அவர்களுக்கு காபியோ டீயோ கொடுத்தது சென்றாயனாகத்தான் இருக்கும். எல்லோர் மீதும் பாசம், எப்போதும் பிரியம் என்றிருக்கும் சென்றாயன் உள்ளே எண்ட்ரி ஆகிறார்.

தனக்கே உண்டான ஸ்டைலில் கையை வீசி, காலை அகட்டி, ஹாலில் ஒய்யாரமாக வலம் வருகிறார் சென்றாயன். அப்போது ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா எல்லோருமே உற்சாகமாகிப் போகிறார்கள்.

‘ஏய்... என்னப்பா... உங்களுக்கு எவ்ளோ பெரிய பேரு தெரியுமா? பெரிய ஸ்டாராகப் போறீங்க பாருங்க’ என்று சொல்ல, ஒரே கூச்சல், கைத்தட்டல். ஆரவாரம்.

அப்போது ஐஸ்வர்யாவிடம்,. ‘ஐஸு... கவலையேபடாதே. எதையும் நம்பாதே. உனக்கு எவ்ளோ நல்ல பேரு இருக்கு தெரியுமா? வெளியே வந்தாத்தான் புரியும் உனக்கு. எதுக்கும் கவலைப்படாதே. மிகப்பெரிய  ஆதரவு உனக்கு இருக்கு’ என்று சொல்ல, ஐஸ்வர்யா உணர்ச்சிவசப்பட்டு அழுதேவிட்டார்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close