[X] Close

மணி சாரின் செக்கசிவந்த வானத்தை மிஸ் பண்ணிடாதீங்க!- கவுதம் மேனன்


ccv-is-trippy

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Sep, 2018 13:37 pm
  • அ+ அ-

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த செக்க சிவந்த வானம் படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இயக்குநர் கவுதம் மேனின் பார்வை படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச் சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்திருக்கிறார்.

இப்படம் குறித்து கவுதம் மேனன், "மணி சாரும் அவர் நட்சத்திரங்களை திரையில் பற்றி எரியவிட்டிருக்கும் புத்திக்கூர்மையும் சினிமா உலகில் ஒரு துணிச்சலான கதாபாத்திர படைப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஒரு கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இது பொருந்தும். வேலை என்று வந்துவிட்டால் மணி சார்தான் தலைமை வித்தகர். சினிமாவின் விதிகளை ஜன்னல்கள் வழியே தூக்கி எரிந்துவிடுவார். முந்துங்கள்.. செக்கச் சிவந்த வானத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

எஸ்டிஆரின் நடிப்பு தத்ரூபமாகவும் நேர்மையாகவும் இருக்கிறது. அருண் விஜய் படபடக்க  வைக்கிறார். திரையை அலங்கரிக்கிறார். விஜய் சேதுபதி அப்படியே யதார்த்தமாக பரசவப்படுத்துகிறார்.

ஜோதிகாவின் பாத்திரம் அவ்வளவு அடர்த்தி. ஆனால், அதை அவர் எளிதாக கையகப்படுத்தியிருக்கிறார். அரவிந்த் சாமிதான் படத்தின் பவர்ஹவுஸ். சமீப காலத்தில் இப்படி ஒரு சிற்பான சண்டைக் காட்சி வந்ததில்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அடிதூள். செக்கச் சிவந்த வானம் கிரங்கடிக்கும்!" என புகழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close