தல தங்கமானவர்; கடவுள்னா அவர்தான் கடவுள்!- விஸ்வாசம் பாட்டி நெகிழ்ச்சி

தல தங்கமானவர்; கடவுள்னா அவர்தான் கடவுள் என விஸ்வாசம் படத்தில் நடித்திருக்கும் சிட்டுக்குருவி பாட்டி நெகிழ்ச்சியாக பேசியிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்துவரும் படம் ‘விஸ்வாசம்’. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தில், யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ‘மெர்சல்’ படத்தில் நடித்த சிட்டுக்குருவி பாட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து அவர் பேசியுள்ள குட்டி வீடியோ அஜித் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அதில் அந்தப் பாட்டி, "தல ஒரு கடவுள் மாதிரி. கேரவனே ஏற மாட்டார். எங்களோட தான் உக்காருவாரு. எங்களோடத்தான் சாப்பிடுவார். கடவுள்னா அவர்தான் கடவுள். தங்கமானவரு தல" என பேசியிருக்கிறார்.
Madurai #Viswasam Artist Grandma about Our #Thala #Ajith ..
— Ajith Fans Madurai (@AjithFC_Mdu) September 26, 2018
What a lovely grandma
தல கடவுள் மாதிரி , கடவுள்னா அவர் தான் கடவுள் pic.twitter.com/BkMXT0vfqG