[X] Close

மீண்டும் 'பிக் பாஸ்' வீட்டுக்குள் வருகிறார் ஓவியா


oviya-comes-into-bigg-boss-house-again

  • kamadenu
  • Posted: 26 Sep, 2018 20:07 pm
  • அ+ அ-

‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் இறுதிவார நிகழ்ச்சியில் வரவுள்ளார் ஓவியா.

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், இம்முறை அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுபவர் என்பது தெரியவுள்ளது.

17 பேர் கலந்து கொண்ட போட்டியில், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய 4 பேரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். கடந்த சீஸன் போட்டியாளர்கள், இந்த சீஸனில் இருந்து வெளியேற்றப்பட்டப் போட்டியாளர்கள் என அடிக்கடி ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் வந்து செல்கின்றனர்.

பிக் பாஸ் சீசன் 1-ல் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் ஓவியா. இம்முறை ஒரே ஒருமுறை மட்டும் வீட்டுக்குள் சென்று வந்தார். மீண்டும் எப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இது தொடர்பாக ‘உங்களையும் வீட்டுக்குள் பார்ப்பதற்கு ஏதாவது வாய்ப்பிருக்கிறதா?’ என ஓவியாவுக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பினார் ஒருவர். அதற்கு ‘ஆமாம், காத்திருந்து பாருங்கள்’ எனப் பதிலளித்துள்ளார். எனவே, இறுதி நாளின்போது அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close