[X] Close

தனியார் கல்லூரியில் சர்கார் இசை வெளியீடு


sarka-audio-release

  • kamadenu
  • Posted: 26 Sep, 2018 13:55 pm
  • அ+ அ-

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’சர்கார்’. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம், வருகிற தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கிறது.

இந்தப் படத்தில்,  வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க,  பாடல்களை விவேக் எழுதியுள்ளார்.

வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘சர்கார்’ படத்தின் பாடல்கள் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ‘சிம்டாங்காரன்’ என்ற ஒரு பாடல் மட்டும் கடந்த 24-ம் தேதி வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close