[X] Close

’இனி  குளிர்பானங்களுக்கு ஸ்ட்ரா கிடையாது’- எஸ்பிஐ சினிமாஸ் அதிரடி


spi-cinemas-no-straw

  • kamadenu
  • Posted: 26 Sep, 2018 13:50 pm
  • அ+ அ-

பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்கள் மெல்ல மெல்ல புரிந்து கொள்ள தொடங்கியிருக்குறார்கள்.

வரும் 2019ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்.பி.ஐ சினிமாஸ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 

இனி எஸ்.பி.ஐ சினிமாஸ் திரையரங்குகளில் விற்கப்படும் குளிர்பானங்களுளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்ட்ரா, இனிமேல் விநியோகம் செய்யப்படாது.

உங்களுக்கு ஸ்ட்ரா தேவைப்பட்டால், அங்கிருக்கும் ஊழியர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் ஸ்ட்ராவைத் தவிர்ப்பதன் மூலம் பூமியைப் பாதுகாக்க முடியும் என்று எஸ்பிஐ சினிமாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வருகிற அக்டோபர் 2-ம் தேதியில் இருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. எஸ்பிஐ சினிமாஸின் இந்த அறிவிப்புக்கு, சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close