[X] Close

பாலாஜி தலைல குப்பை; அமைதியா இருந்தது தப்பு! - ரித்விகா குற்ற உணர்ச்சி


rithvika-balaji

பாலாஜி தலையில் குப்பை - பிக்பாஸ்

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Sep, 2018 12:57 pm
  • அ+ அ-

பிக்பாஸின் நூறாவது நாள் நேற்று. வெற்றிகரமாக கடந்து விட்ட நூறு நாளில், இன்னும் ஐந்துநாட்கள்தான் பாக்கி. ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா என்று நாலே நாலுபேர்தான் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு இன்னும் கொஞ்சம் உசுப்பேற்றவும் இன்னும் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுக்கவும் என இரட்டைக்கலவையாக, வைஷ்ணவியையும் ரம்யாவையும் அனுப்பி ஒருநாள் அனுப்பிவைத்தார்கள். அங்கே பேச்சும் சிரிப்புமாக களைகட்டியது பிக்பாஸ் வீடு.

பிறகு, ஷாரிக்கையும் நித்யாவையும் அனுப்பிவைத்தார்கள். நித்யா வந்ததும் எல்லோரும் அன்பொழுகப் பேசினார்கள். பாலாஜி அண்ணா குறித்தும் போஷிகா குறித்தும் விசாரித்தார்கள்.  ஷாரிக்கிடமும் அதே நலம் விசாரிப்புகள் இருந்தன.

ஆனால் ஏனோ, ஷாரிக் இடித்துவைத்த புளி மாதிரி முகத்தை உர்ரென்றே வைத்துக்கொண்டிருந்தார். ஷாரிக் வந்த அந்த நிமிடத்தில், ஐஸ்வர்யாவுக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை என்று இருந்தது. தவித்துத்தான் போனார். ஓர் வெட்கம் கலந்த சிரிப்பைப் பார்க்கமுடிந்தது.

எல்லோரும் கேலி பண்ணினார்கள். கிண்டல் செய்தார்கள். கலாய்த்தெடுத்தார்கள்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, பிக்பாஸ் வீட்டில் செய்த விஷயங்களில், தவறு என நினைக்கும் விஷயங்களைச் சொல்லச் சொன்னார் பிக்பாஸ். அப்போது ரொம்ப ஹானஸ்ட்டாக, எல்லோருமே மனம் திறந்து சொன்னார்கள்

குறிப்பாக, ரித்விகா பேசும்போது, ‘சர்வாதிகாரி டாஸ்க்ல, பாலாஜி அண்ணா மேல குப்பை கொட்டப்பட்டது. அந்த சமயத்துல, சுத்தி நின்னோமே தவிர, அதை யாருமே தடுக்கவே இல்ல. இதை டாஸ்க்குன்னு நினைச்சோமா, இல்ல எல்லாருமே இப்படி குப்பை கொட்றதை விரும்பினோமான்னு தெரியல. அப்படியே நின்னுட்டிருந்தோம்.

அதுக்குப் பிறகு, பாலாஜி அண்ணா தலைல குப்பை கொட்டின சம்பவம் இந்த நிமிஷம் வரைக்கும் ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கு. தப்பு பண்ணினவங்களை விட்ருங்க. தப்புப் பண்ணும் போது, அதை தடுக்காம, வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கறதுதானே பெரிய குற்றம்.

அந்த வகைல, பாலாஜி அண்ணா தலைல குப்பை கொட்டினப்போ, அதை நான் தடுத்து நிறுத்திருக்கணும். அது எனக்கு உறுத்துது’

இவ்வாறு ரித்விகா சொல்ல,. அதை ஆமோதிப்பது போல பிக்பாஸ் வீட்டார் கரவொலி எழுப்பினார்கள்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close