[X] Close

ஐ.நா., பெரிய ஜோக்குகளுக்குத்தான் சிரிக்கும்!- ட்ரம்ப்பை கலாய்த்த சித்தார்த்


siddharth-laughs-at-trump

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Sep, 2018 12:19 pm
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைப் பார்த்து ஐ.நா., அரங்கில் குழுமியிருந்த உலக நாடுகளின் பிரதிநிகள் சிரித்த சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய விஷயமாக பரவி வரும் நிலையில் நடிகர் சித்தார்த்தும் தன் பங்குக்கு ட்ர்ம்ப்பை கிண்டல் செய்திருக்கிறார்.

இது குறித்து சித்தார்த் தனது ட்விட்டரில், "ஐ.நா., சபை பெரிய ஜோக்குகளுக்கும் மட்டுந்தான் சிரிக்கும். நீங்கள் மீண்டும் ஐ.நா., சபையை சிறப்பித்துவிட்டீர்கள்" என ட்ரம்ப்பை கலாய்த்திருக்கிறார். ட்ரம்ப் குறித்து செய்தியை பகிர்ந்து அவர் இந்த ட்வீட்டைப் பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்ப் பேசியது என்ன?

"இன்று, நான் ஐ.நா., பொது சபையில் உங்கள் முன் நின்று அமெரிக்காவின் அளப்பரிய சாதனைகளைப் பற்றி பேசவிருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது நிர்வாகம் அமெரிக்க வரலாற்றில் வேறு எந்த தலைவரின் கீழான நிர்வாகமும் சாதிக்காததை சாதித்திருக்கிறது. இதுதான் உண்மை" என்று பேசினார்.

ஒரு நேனோ செகண்ட் இடைவெளியில் அமெரிக்கா உண்மையைத்தான் சொல்லும் என்று சொல்லவே அவர் பேசிய இடைவெளியில் முதலில் லேசாக ஆரம்பித்த சிரிப்பலை.. "இதை நான் எதிர்பார்க்கவில்லை. தட்ஸ் ஓகே" என்று கூறியவுடன் அரங்கமே அதிர்ந்தது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close