[X] Close

'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்': தமிழில் விளம்பரப்படுத்தும் அமிதாப், ஆமிர் - வீடியோ வடிவில்


thugs-of-hindustan-promo-video

  • kamadenu
  • Posted: 26 Sep, 2018 11:44 am
  • அ+ அ-

யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அமிதாப்பச்சன், ஆமிர்கான் இணைந்து நடிக்கும் 'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' (“Thugs of Hindostan”) திரைப்படம் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகிறது.

அமிதாப், ஆமிர்கான், கத்ரினா கைஃப் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடிப்பில், வெளியாகவிருக்கும் இப்படத்திற்க்கு பாலிவுட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆமிர்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமிதாப் பச்சனும், ஆமிர்கானும் தமிழில் பேசியுள்ளனர். 

வீடியோவில் அவர்கள் பேசியதாவது:

”அடுத்த யாஷ்ராஜ் பிலிம்ஸ் படத்தில் முதல் தடவையாக நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான். இந்த படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்த தீபாவளிக்கு தக்ஸ் வரப் போகிறார்கள். சினிமா தியேட்டர்களில் சந்திப்போம்” என்று ஆமிர்கானும் அமிதாப் பச்ச்னும் அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆமிர்கான், “தமிழில் முதல் முயற்சி” என்று குறிப்பிட்டு இருக்கிறார். அமிதாப் பச்சன் மற்றும் ஆமிர்கான் இருவரும் தமிழில் பேசியிருப்பதால், தமிழ் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close