[X] Close

ஷாரிக்... கொஞ்சம் காது கொடுத்திருக்கலாமே!


shariq-biggboss

பிக்பாஸ் - ஐஸ்வர்யா

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Sep, 2018 09:31 am
  • அ+ அ-

ஒருவழியாக வெற்றிகரமான நூறாவது நாளைக் கடந்துவிட்டது. இன்னும் 4 நாட்களே உள்ளன. ஐந்தம் நாள் க்ளைமாக்ஸ். சுபம். இந்த நிலையில், நேற்று முன் தினம், வைஷ்ணவியும் ரம்யாவும் வந்திருந்தார்கள்.

நேற்று, நித்யாவும் ஷாரிக்கும் வந்தார்கள்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் கலகலவெனப் பேசிக்கொண்டிருந்தார்கள் எல்லோருமே. பிறகு, வந்த நேரம் முடிந்துவிட்டது. வந்த வேலையும் முடிந்துவிட்டது. கிளம்பலாம் என்பது போல் பிக்பாஸ் அறிவித்தார். அவர்கள் டாட்டா காட்டிவிட்டு வெளியேறினார்கள்.

நேற்று வாசல் வழியாக, நித்யா வந்தார். எல்லோரும் நலம் விசாரித்தார்கள். ‘பாலாஜி அண்ணா எப்படி இருக்காரு? போஷிகா நல்லா இருக்காளா? கூட்டிட்டு வந்திருக்கலாமே’ என்றெல்லாம் கேட்டார்கள்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது பிக்பாஸ், ‘ஐஸ்வர்யா, கன்பெஷன் ரூமுக்கு வாங்க’ என்று அழைத்தர். எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆச்சர்யம். குழப்பம். ஐஸ்வர்யா உள்ளே சென்றால்... அங்கே, உட்கார்ந்துகொண்டிருந்தார் ஷாரிக். என்னவோ பேச்சுச் சத்தம் கேக்குது. பாலாஜி அண்ணாவா... என்று கேட்டார்கள். மஹத்தா இருக்குமோ என்றார்கள். ஷாரிக்குன்னு நினைக்கிறேன் என்றார்கள்.

ஷாரிக் ஹாலுக்கு வந்தார். ஐஸ்வர்யா, குட்டிப் போட்ட பூனையாய் சுற்றிச் சுற்றி வந்தார். தனியே சென்றார். ‘என்ன பண்றீங்க பிக்பாஸ்... என்ன பண்றீங்க? எனக்கு ஒண்ணும் புரியல’ என்று சிரித்துக்கொண்டே, கொஞ்சம் தவித்து, லேசாக மருகி, படபடப்பாகத்தான் இருந்தார் ஐஸ்வர்யா.

ஷாரிக் எண்ட்ரியானதும், வீடே குதூகலித்துப் பார்த்தது. உள்ளே வரும் ஷாரிக்கை யாரும் பார்க்கவில்லை. எல்லோரும் ஐஸ்வர்யாவையே பார்த்தார்கள்.

ஐஸ்வர்யாவின் முகத்தில் மெல்லியதாகப் புன்னகை. சிரிப்பு. ‘அட... என்னடா இது... ஐஸ்வர்யா இப்படிலாம் கூட சிரிப்பாரா?’ என்று கேட்க, இன்னும் சிவக்கச் சிவக்க நாணினார் ஐஸு. ’என்ன பண்றீங்க கடவுளே...’ என்று இந்த முறை கடவுளையே கேட்டு, சிரித்துக்கொண்டே அலைந்தார் ஐஸ்வர்யா.

 ‘ஐஸ்வர்யாவோட இந்த முகத்தை பாத்ததே இல்லியே...’ என்று இன்னொருவர் சொல்ல... இப்படி எல்லாரும் சேர்ந்து ஐஸ்வர்யாவைக் கலாய்த்தார்கள்.  

எல்லோரும் அன்புடன் வரவேற்றுப் பேசிக்கொண்டிருக்க, அப்போது நித்யா, ஐஸ்வர்யாவின் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘என்ன... சந்தோஷம்தானே’ என்று யாரை வைத்துக் கேட்கவேண்டுமோ அப்படிக் கேட்டார்.  ‘இத்தனை நாளா மிஸ் பண்ணிருந்தே. அதான் வந்துட்டாருல்ல ஷாரிக். சந்தோஷம்தானே...’ என்பது போலான உள்ளர்த்தம் ஓராயிரம் அர்த்தம் எல்லாம் அதனுள்ளே ஒட்டிக்கொண்டிருந்தது.

ஆனால் ஐஸ்வர்யாவோ... ‘இந்த பிக்பாஸ் வீட்ல எனக்குக் கிடைச்சதும் யாஷிகாதான். இங்கே நான் இப்ப இழந்து நிக்கிறதும் யாஷிகாவைத்தான். ஆமாம்... யாஷிகாவோட பிரிவுதான் எனக்குப் பெரிய வலி, வேதனை’ என்றார்.

பிறகு,ஐஸ்வர்யாவும் ஷாரிக்கும் தனியே பேசிக்கொண்டிருந்தார்கள். ‘நான் வெளியே கிளம்புனப்போ நிறைய அழுதது நீதான். ஆனா, நான் போன பிறகு, என்னென்னவோ என்னைப் பத்திப் பேசினே. நான் பாத்தேன். தினமும்தான் பாத்தேனே. ஏன் அப்படிப் பேசினே?’ என்று ஷாரிக், வழக்கம்போல முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு கேட்டார்.

அப்போது, ஐஸ்வர்யா அதற்கான விளக்கத்தைக் கொடுக்க வாயைத் திறந்தார். ரெண்டாவது வார்த்தை ஆரம்பிக்கும்போதே, விருட்டென்று அந்த இடத்தை விட்டு, விலகினார் ஷாரிக். ‘என் மனசை காயப்படுத்தாதே ஷாரிக்’ என்று ஐஸ்வர்யா சொல்ல, அதையெல்லாம் சட்டையே பண்ணாமல் இருந்தார் ஷாரிக்.

‘அடச்சே... இந்த ஷாரிக் எதுக்கு வந்தாப்ல? ஐஸ்வர்யாவை காயப்படுத்துறதுக்கே வந்தாரா? ஒருத்தங்ககிட்ட விளக்கம் கேக்கறாரு. அவங்க சொல்ல ஆரம்பிக்கிறாங்க. அப்ப தடக்குன்னு அந்த இடத்துலேருந்து நகர்ந்து போனா, அது அவங்களை எவ்ளோ காயப்படுத்தும்? இது மரியாதையும் இல்ல, இதுல அன்பும் இல்ல...’ என்றெல்லாம் பிக்பாஸ் நேயர்கள் பொருமித்தள்ளியிருப்பார்கள்.

ஷாரிக்கு... மனசைத் தர்றது இருக்கட்டும். கொஞ்சம் காது கொடுத்திருக்கலாமே ஷாரிக்கு!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close