[X] Close

அந்த சண்டக்கோழி விஷால் வேற; இப்போ விஷால் லெவல் வேற!  - இயக்குநர் லிங்குசாமி பெருமிதம்


sandakozhi2-lingusamy

இயக்குநர் லிங்குசாமி

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Sep, 2018 19:34 pm
  • அ+ அ-

அந்த சண்டக்கோழி பண்ணும் போது இருந்த விஷால் வேற.  இப்போ இருக்கிற விஷால் லெவலே வேற. அப்படியொரு வளர்ச்சியும் நிதானமும் பக்குவமும் கொண்டிருக்கார் விஷால் என்று சண்டக்கோழி 2 ஆடியோ விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசினார்.  

 

லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடித்த சண்டக்கோழி 13 வருடங்களுக்கு முன்பு வெளியானது. இப்போது அதன் இரண்டாம்பாகம் வெளியாகிறது. முதல் பாகத்தில், விஷால், மீராஜாஸ்மின், ராஜ்கிரண், லால் முதலானோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.

 

சண்டக்கோழி 2ல், விஷாலுடன் ஜோடி சேருகிறார் கீர்த்தி சுரேஷ். ராஜ்கிரண் முதலானோர் நடித்து வருகிறார்கள். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சண்டக்கோழி 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.


இதில் இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது:


படத்தின் இடைவேளை வரை நேற்று பார்த்தார் விஷால். பார்த்துவிட்டு, 13 வருஷத்துக்கு முன்னாடி எல்லாரும் எப்படி இருந்தாங்களோ, அப்படித்தான் எல்லாரும் இருக்கற மாதிரி இருக்குன்னு சொன்னார். இன்னும் சிலர், அந்த அனுபவங்கள் 13 மாசத்துக்குள்ளேதான் நடந்தது மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. எனக்கு என்னவோ, 13 நாளுக்கு முன்னால நடந்த மாதிரி இருக்கு.


ஆனா ஒரு விஷயம்... அப்ப சண்டக்கோழி பண்ணும் போது இருந்த விஷால் வேற. இப்ப சண்டக்கோழி 2 பண்ணிருக்கிற விஷால் வேற. அவரோட நடிப்புல அவ்வளவு முதிர்ச்சி தெரியுது. இத்தனைக்கும் அவரோட வளர்ச்சி, இந்த இடைப்பட்ட காலத்துல எங்கேயோ உச்சத்துக்குப் போயிருச்சு. ஏகப்பட்ட டென்ஷன். ரெண்டு சங்கத்து பொறுப்புகள். வேலைகள், சுமைகள்னு எல்லாத்தையும் திறம்பட செஞ்சிட்டிருக்கிற விஷால், இந்தப் படத்துக்குள்ளேயும் அவ்வளவு இன்வால்வ்மெண்ட்டைக் கொடுத்திருக்காரு.


இந்தியாவுலயே பார்ட் 1, பார்ட் 2ன்னு அதிகமா எடுத்தது சிபிஐ டைரிக்குறிப்பு படம்தான். இதுவரைக்கும் நாலு பார்ட்டுகள் எடுத்திருக்காங்க. அதேபோல, எனக்கும் விஷாலுக்கும் உள்ள எனர்ஜி இப்படியே நீடிச்சா, சண்டக்கோழி 3, சண்டக்கோழி 4, சண்டக்கோழி 5ன்னு நிறைய பண்றதுக்கு தயாரா இருக்கேன். 


இந்தப் படத்துல, குறிப்பா ரெண்டு மூணு சீன்ல, விஷால் நடிப்பு அற்புதம். டக்குன்னு மம்முட்டி, அப்புறம் சூர்யான்னு திறமையான நடிகர்களைப் பாக்கற மாதிரியான நடிப்பைக் கொடுத்திருக்காரு விஷால். நாங்க ரெண்டுபேரும் வாடாபோடான்னுதான் பேசிக்குவோம். அந்த அளவுக்கு என்னுடைய நெருங்கிய நண்பர் விஷால். இதுவரை 25 படங்கள் பண்ணிருக்காரு. சண்டக்கோழி 2 அவரோட 25வது படம். 


பல வருஷம் கழிச்சு நானும் விஷாலும் சேர்ந்திருக்கோம். அதுக்கு நியாயம் செஞ்சாகணும். சண்டக்கோழி படத்துக்கு நல்ல மரியாதை இருக்கு. அந்த மரியாதையையும் காப்பாத்தணும். அப்படிப்பட்ட ஒரு படமா சண்டக்கோழி 2 வந்திருக்குன்னு நம்புறேன்.


இவ்வாறு இயக்குநர் லிங்குசாமி பேசினார். 
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close