[X] Close

ரித்விகா ஜெயிக்கட்டும்; அதான் என் ஆசை!  - ஐஸ்வர்யாவின் அன்பு மனசு


rithvika-biggboss

பிக்பாஸ் - ரித்விகா

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Sep, 2018 18:49 pm
  • அ+ அ-

பிக்பாஸ்2 வீடு நூறாவது நாளை நெருங்கிவிட்டது. மொத்தம் 16 பேர் நுழைந்தார்கள். அனந்த் வைத்தியநாதன், மமதி, வைஷ்ணவி, மஹத், ஷாரிக், மும்தாஜ், ஜனனி, ரித்விகா, பாலாஜி, நித்யா, டேனியல், சென்றாயன், பொன்னம்பலம், ரம்யா, ஐஸ்வர்யா, யாஷிகா என 16 பேர் உள்ளே வந்தார்கள். ஒவ்வொருவராக வெளியேறினார்கள். 


நடுவே கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், ப்யார் பிரேமா காதல், விஸ்வரூபம்2, தமிழ்ப்படம் 2 என படக்குழுவினர் உள்ளே வந்தார்கள். அதுவொரு நிகழ்வாகவும் ஜாலியாகவும் இருந்தது பிக்பாஸ் வீட்டாருக்கு. 


நடுவே வாத்தியார் கேரக்டரில் சினேகன் வந்தார். 


பிறகு பிக்பாஸ் 1 வீட்டில் இருந்த சினேகன், ஆர்த்தி, வையாபுரி, சுஜா, காயத்ரி ரகுராம் வந்தார்கள். ஒருவாரம் தங்கினார்கள். திடீரென ஆரவ் வந்து அலப்பறையைக் கொடுத்தார். 


டேனியல் வெளியேறிய கையுடன் திருமணம் செய்துகொண்டார். சென்றாயன் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாலோ என்னவோ... வெளியேறும் போது சந்தோஷமாகவே சென்றார். ஆனாலும் சென்றாயனின் வெளியேற்றத்தை மக்கள் ரசிக்கவில்லை. நடுவே, விஜயலட்சுமி வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்தார். 


மும்தாஜை இருந்தவரைக்கும் படுத்தியெடுத்தார்கள் பலரும். வெளியேறியதும் அவரின் அன்பை சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். வெளியே இருந்த நேயர்களும் பிக்பாஸ் 1 வீட்டைச் சேர்ந்தவர்களும் கூட மும்தாஜைப் புகழ்ந்து தள்ளினார்கள். 


இதனிடையே பிக்பாஸ் வீட்டில் பாலாஜி மட்டுமே ஆண் என்று ஒரு வாரம் ஓடியது. இதற்கு அல்பத்தனமாகவும் விஷமத்தனமாகவும் கஸ்தூரி, ட்வீட் போட்டிருந்தது சகிக்கமுடியவில்லை என்று நேயர்கள் புலம்பினார்கள். 


போன வாரம், பாலாஜியும் யாஷிகாவும் வெளியேறினார்கள். யாஷிகாவின் வெளியேற்றத்தை நேயர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பிக்பாஸ் வின்னராக, யாஷிகாதான் வருவார் என பலபேர் டிக் அடித்து வைத்திருந்தார்கள் போல! நடிகை ஸ்ரீப்ரியா கூட கொந்தளித்தார். 


இப்போது, ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி என நாலே நாலுபேர் இருக்கிறார்கள். போன முறை பிக்பாஸ் 1ல் சினேகனும் ஆரவ்வும் இருந்தார்கள். 


நேற்றைய தினம், பிக்பாஸ் வீட்டில் இருந்த வைஷ்ணவியும் ரம்யாவும் வந்தார்கள். அப்போது வைஷ்ணவியிடம் பேசிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா, ’யாஷிகா வெளியேறினதுல பயங்கர அதிர்ச்சியாகிட்டேன். மன உளைச்சல்ல தவிச்சேன். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டு வரேன். அவ இல்லாதது வெறுமையா இருக்கு.


எனக்கு இதுவே போதும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சில, இறுதி வரை வந்ததே பெரிய விஷயமா நினைக்கிறேன். இதுலயே என் லட்சியம் நிறைவேறிட்டதா ஒரு உணர்வு. மத்தபடி பிக்பாஸா ஜெயிக்கணும்னு நினைப்பெல்லாம் இல்ல. பேராசைக்காரியும் இல்ல நான். 
ரித்விகாவோ ஜனனியோ ஜெயிக்கட்டும். அதுலயும் ரித்விகா ஜெயிக்கட்டும். இதான் என்னோட ஆசை.அதுலயும் ரித்விகா ஜெயிக்கட்டும். அப்படி ஜெயிச்சா, அந்தப் பணம் ரித்விகா குடும்பத்துக்கு ரொம்பவே உபயோகமா இருக்கும்’ என்று திறந்த மனதுடன் தன் ஆசையைச் சொன்னார் ஐஸ்வர்யா. 


இதை இரக்கம் என்றும் சொல்லலாம். அன்பென்றும் உணரலாம். ‘நான் வெளிய போய் சம்பாதிச்சுக்குவேன்’ என்று வைஷ்ணவியிடம் சொல்ல, ‘ஏன் ரித்விகா சம்பாதிக்கமாட்டாளா? அவளும்தான் வெளியே போய் சம்பாதிப்பா’ என்று வைஷ்ணவி சொன்னது சரிதான் என்றாலும், ஐஸ்வர்யாவின் பரந்த மனதை, அந்த அன்பை சட்டென்று உடைத்துவிடவேண்டுமா என்ன?


தன் மகளைப் போல் பாவித்து வந்த பாலாஜியும் தன்னையே நேசித்து வந்த யாஷிகாவும் என அந்தப் பிரிவு, ஒரு பேரன்பை  உள்ளுக்குள் கனிய வைத்திருக்கலாமே என்கிறார்கள் நேயர்கள். 
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close