[X] Close

கேட்டவுடனே பிடிக்காதாம் கேக்க கேக்கத்தான் பிடிக்குமாம்!- அட்ராசிட்டிகளும்; கொண்டாட்டங்களும்


simtangaran-song-lyrics

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Sep, 2018 15:28 pm
  • அ+ அ-

வோர்ல்டு மொத்தமும் அரள உட்டாங்களான்னு தெரியாது ஆனா அது என்னதான் பாடுறாங்கன்னு கேட்பதற்காகவே அந்தப் பாட்டு ஒவ்வொருத்தரும் 6 தடவையாவது கேட்டிருப்பாங்க.

நானும் ஒரு 7 தடவைக்கு மேல கேட்டு பார்த்து லிரிக்ஸ தமிழ்ல எழுதிட்டேன். முதலில், கீழே இருக்கும் லிரிக்ஸ பாடுங்க.. படிங்க.. என்ன வேணும்னாலும் பண்ணுங்க...

பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து 
வோர்ல்டு மொத்தமும் அரள வுடனும் பிஸ்து 
பிசிறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து 
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ.... தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ.... தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
சிம்டாங்காரன் எங்கன்னா நீ சீறேன் 
நின்ட்டேன் பாரேன் முஷ்டு அப்டிகா போறேன் 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஓ..ஓ..ஓ..ஓ 
சிம்டாங்காரன் சில்பினுக்கா போறேன் 
பக்கில போடேன் விருந்து வைக்கபோறேன் 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஓ..ஓ..ஓ..ஓ 
பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து 
வோர்ல்டு மொத்தமும் அர்ள வுடனும் பிஸ்து 
பிசுறு கெள்ப்பி பெர்ள வுடனும் பல்து 
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ.... தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ.... தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
அந்தரு பண்ணிகினா தா..... இந்தா நா... தா .... 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஓ..ஓ..ஓ..ஓ 
மன்னவா நீ வா வா வா 
முத்தங்களை நீ தா தா தா 
பொழிந்தது நிலவோ... மலர்ந்தது கனவோ
...ஓ...ஓ... ஓ..ஓ..ஓ..ஓ 
ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய்
ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய்
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ.... தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
அந்தரு பண்ணிகினா தா..... இந்தா நா...  
குபீலு..
பிஸ்து.. 
பல்து.. (இவையெல்லாம் கோரஸ்)
நிக்கலு பிக்கலு 
ஓ.... தொட்டன்னா தூக்கலு
நிக்கலு பிக்கலு 
...ஓ...ஓ... ஓ..ஓ..ஓ..ஓ
...ஓ...ஓ... ஓ..ஓ..ஓ..ஓ  
கொக்கலங்கா கொக்கலங்கா கொக்கலங்கா குபீலு 
ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா டம்மாலு 
நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல 
அல்லா ஜோரும் பேட்டைல சிரிச்சினுகுறோம் சேட்டையில குபீலு
பிசுறு கெளப்பு பிசுறு கெளப்பு 
கொக்கலங்கா கொக்கலங்கா கொக்கலங்கா குத்த போடு 
...ஓ...ஓ... ஓ..ஓ..ஓ..ஓ 
பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து 
வோர்ல்டு மொத்தமும் அரள வுடனும் பிஸ்து 
பிசுறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ.... தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ.... தொட்டனா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
அந்தரு பண்ணிகினா தா..... இந்தா நா... 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஏய்ய் நிக்கலு பிக்கலு
தொட்டன்னா தூக்கலு
ஓ..ஓ..ஓ..ஓ 
ஏய்ய் நிக்கலு பிக்கலு

படிச்சிட்டீங்களா!? 

இந்தப் பாட்டை நான் கடைசியா கேட்டபோது யூடியூப் வியூவ்ஸ் 4,955,891 .. இப்ப இன்னும் ஜாஸ்தியாகியிருக்கும்.

சென்னை தமிழில் பாட்டை எழுத முயற்சித்ததற்கு வாழ்த்து சொல்லலாம். ஆனால், அதை அழகாக புரியும்படி பாடியிருக்கலாம். மனோரமாவின் வா வாத்யாரே வூட்டாண்ட கூட இன்னமும் எல்லோராலும் ரசிக்கப்படுகிறது.

அந்த லிரிக்ஸை மியூசிக் ஓவர் பவர் பண்ணாத மாதிரி மியூசிக் போட்டிருக்கலாம். அப்புறம் அந்த குபீலு மீட்டருக்குள் அடங்கலன்னு அதை நீட்டி முழக்கி என்னவோ செய்திருக்கிறார்கள். ஆனா, இத்த கேட்டவுடனே பிடிக்காதாம் கேக்க கேக்கத்தான் பிடிக்குமாம் என்கிறார்கள் ரஹ்மான் பேன்ஸ். ஒருபுறம் ஃபேன்ஸ் அட்ராசிட்டிஸ். இன்னொருபுறம் நெட்டிசன் புலம்பல்கள்.

சில சேம்பிள்கள் கீழே..

Current Scenario Hearing #simtangaaran

 

என்னடா மட்டனு குக்கர்னு சொல்லிட்டு இருக்கானுக

 

இன்டர்நேஷனல் ஆக்டர் பேன்ஸ்.. !!

After hearing 4 to 5 Times on YouTube Fans reaction now to  Rahman

ரஹ்மான் பேன்ஸ் now.. 
ஹே அண்ணா (Vijay) இதுக்கெல்லாம் காரணம் நீதான்... 
#SarkarMemes

இது எந்த ரக மியூசிக் என்று இசைப்புயல் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை விளக்கிவிட்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும். 

எனக்குத் தெரிந்து கடந்த 4, 5 ஆண்டுகளாகவே ரஹ்மான் மியூசிக் வெளியாகும் போதெல்லாம் கேட்க கேட்கத்தான் பிடிக்கும் என்கிறார்கள். என்னமோ போ மாதவா!

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close