[X] Close

தமிழ் பொண்ணுங்கதான் ஜெயிக்கணும்... ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போடாதீங்க - ஆர்த்தி மறைமுக ட்வீட்


harathi-tweet

  • kamadenu
  • Posted: 25 Sep, 2018 15:06 pm
  • அ+ அ-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசன் தனது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் வாரத்தில் மும்தாஜ், ஆனந்த் வைத்தியநாதன், வைஷ்ணவி, சென்றாயன் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் களமிறங்கினர். 

பின்னர் வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு 4  பேர் மட்டுமே உள்ளனர். இந்த வார இறுதியில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும். கடந்த சீசன் போட்டியாளரர்களில் ஒருவரான ஆர்த்தி தொடர்ந்து பிக் பாஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில்,

”நம் தமிழ்  பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே!!  நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளராக கொண்டாடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார். 

அதே போல மற்றொரு பதிவில் இந்த ’#AishwaryaDutta வ support பண்ணுரவங்க உங்களோட வச்சுகோங்க அவங்கள பத்தி  நிறையவே தெரியும் 
மீறி தானா வந்து கதருபவர்கள் block செய்யப்படுவீர்கள்’ என்றும் கூறியுள்ளார்.

இன்னொரு பதிவில் 

1.மக்கள் விருது - மும்தாஜ்
2. அப்பாவி விருது - சென்றாயன்
3. பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளர் விருது - விஜயலட்சுமி அல்லது ரித்விகா அல்லது ஜனனி
4. போலி விருது - ஐஸ்வர்யா

என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் முந்தைய சீசன் போட்டியாளர்களான சினேகன், சுஜா, காயத்ரி, ஆரவ், வையாபுரி ஆகியோருடன் ஆர்த்தியும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close