[X] Close

ஆன்லைன் விமர்சகர்களை சாடும் சூரி: சினிமாவை வாழ வையுங்க என வேண்டுகோள்


soori-condemns-online-reviewers-for-seemaraja

  • kamadenu
  • Posted: 25 Sep, 2018 14:36 pm
  • அ+ அ-

'சீமராஜா' படத்துக்காக ஆன்லைன் விமர்சகர்களை கடுமையாக சாடியுள்ளார் நடிகர் சூரி. சினிமாவை வாழ வையுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சீமராஜா’. 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார். இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இதனை பலரும் மறைமுகமாக சாடியிருக்கிறார்கள்.

தற்போது சூரியும் ஆன்லைன் விமர்சகர்களையும் கடுமையாக சாடியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

'சீமராஜா' படத்துக்காக வலைத்தளத்துல ஈசல் மாதிரி விமர்சனம் பண்ணவங்களைப் பார்த்ததே கிடையாது. கட்டம் கட்டி ஒரு படத்தைக் காலி பண்ணனும்னு பண்ணது மாதிரியே இருந்தது. பத்திரிக்கையாளர்களைச் சொல்லல, ஆன்லைனில் விமர்சனம் பண்ணவங்களைச் சொல்றேன். 

கேமரா வைச்சிருக்கிறவங்க எல்லாம் எப்படியிருக்கு என்று பேசியிருக்காங்க. இவ்வளவுப் பேர் தப்பா பேசுற அளவுக்கு ‘சீமராஜா’ தப்பான படம் கிடையாது. ஆன்லைன்ல விமர்சனம் பண்றவங்க எல்லாருமே மனசாட்சியோட விமர்சனம் பண்ணனும். கருத்து சுதந்திரம் இருக்கு என்பதற்காக மரியாதை இல்லாமல், வாய் வந்தபடி எல்லாம் வாடா, போடா, என்ன படம் எடுத்துருக்காங்க, கதையும் இல்ல... ஒண்ணுமே இல்ல என்றெல்லாம் பேசக்கூடாது. அதே மாதிரி படம் பார்க்கப் போறவனுக்கு, விமர்சனம் என்ற பெயரில் மொத்த கதையுமே சொல்லிடுறீங்க. 

எந்தவொரு இயக்குநரும் தோற்கணும் அப்படினு படம் எடுக்குறதுல்ல. சினிமாவை சினிமாவாக பாருங்கள். விமர்சனம் பண்றவங்க முதலில் ஒரு சீன் எடுக்க எவ்வளவு கஷ்டப்படுறோம் என வந்து வேடிக்கை பாருங்க. விமர்சனம் பண்றவங்களும் சினிமாவுல தானே இருக்கீங்க. சினிமாவில் தானே சம்பாதிக்கிறீங்க. சினிமாவுக்குள்ள இருந்துக்கிட்டு, சாப்பிட்டுக்கிட்டு அதை அழிப்பது தான் உங்க வேலையா?. 

தயவு செய்து விமர்சனம் பண்ணுங்க, யார் மனசையும் கஷ்டப்படுத்துற மாதிரி விமர்சனம் பண்ணாதீங்க. மரியாதை இல்லாம பேசாதீங்க. ஒரே மாதிரி படம் எடுக்குறாங்கனு சொல்றீங்க. ஆனா, உங்களோட விமர்சனத்துல படத்தோட பெயர் மட்டும் தான் மாறுது. வார்த்தைகள் எல்லாம் அப்படியே தான் இருக்கு. அது எப்படி?. போன வார விமர்சனத்துல யூஸ் பண்ண வார்த்தைகளை யூஸ் பண்ணாம அடுத்த வாரம் விமர்சனம் பண்ணுங்க பார்ப்போம். ரசிகர்களை தியேட்டர் பக்கமே போகவிடாத மாதிரி விமர்சனம் பண்றீங்களே, உங்களுக்கு அந்த தயாரிப்பாளரைப் பார்த்தா பாவமா தெரியலயா?. சினிமாவை தயவு செய்து வாழ வையுங்க. 

இவ்வாறு சூரி தெரிவித்தார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close