[X] Close

ஷாரிக் வருகை சந்தோஷம் இல்ல; யாஷிகாவின் பிரிவு இன்னும் வலிக்குது! - ஐஸ்வர்யா நெத்தியடி


sharik-yashika-iswarya

ஷாரிக் - ஐஸ்வர்யா - நித்யா

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Sep, 2018 14:16 pm
  • அ+ அ-

ஷாரிக் வருகை சந்தோஷம் இல்ல. ஆனா, யாஷிகாவின் பிரிவு இன்னும் வலிக்குது என்று ஐஸ்வர்யா நெத்தியடிப் பதிலைச் சொன்னார். 

ஒருவழியாக வெற்றிகரமான நூறாவது நாளை நெருங்குகிறது பிக்பாஸ். இன்னும் ஐந்துநாட்களே உள்ளன. இது எக்ஸ்டரா ஐந்து. இந்த நிலையில், நேற்று, வைஷ்ணவியும் ரம்யாவும் வந்திருந்தார்கள்.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் கலகலவெனப் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு, வந்த நேரம் முடிந்துவிட்டது. வந்த வேலையும் முடிந்துவிட்டது. கிளம்பலாம் என்பது போல் பிக்பாஸ் அறிவித்தார்.

அவர்கள் டாட்டா காட்டிவிட்டு வெளியேறினார்கள்.

இன்றைக்கான நிகழ்ச்சியின் பிக்பாஸ் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்கு இன்றைய வருகை யார் தெரியுமா? ஷாரிக்.

ஷாரிக் எண்ட்ரியானதும், வீடே குதூகலித்துப் பார்க்கிறது. யாரைப் பார்க்கிறது என்பதுதான் கேள்வி. உள்ளே வரும் ஷாரிக்கை யாரும் பார்க்கவில்லை. எல்லோரும் ஐஸ்வர்யாவையே பார்க்கிறார்கள்.

ஐஸ்வர்யாவின் முகத்தில் மெல்லியதாகப் புன்னகை. சிரிப்பு. ‘அட... என்னடா இது... ஐஸ்வர்யா இப்படிலாம் கூட சிரிப்பாரா?’ என்று சொல்கிறார்கள். ‘ஐஸ்வர்யாவோட இந்த முகத்தை பாத்ததே இல்லியே...’ என்று இன்னொருவர் சொல்லுகிறார். இப்படி எல்லாரும் சேர்ந்து ஐஸ்வர்யாவைக் கலாய்க்கிறார்கள்.

இந்த நிலையில், ஷாரிக் மட்டுமில்லாமல் நித்யாவும் உள்ளே வருகிறார் இன்றைய தினத்தில்!

எல்லோரும் அன்புடன் வரவேற்றுப் பேசிக்கொண்டிருக்க, அப்போது நித்யா, ஐஸ்வர்யாவின் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘என்ன... சந்தோஷம்தானே’ என்று யாரை வைத்துக் கேட்கவேண்டுமோ அப்படிக் கேட்கிறார். ‘இத்தனை நாளா மிஸ் பண்ணிருந்தே. அதான் வந்துட்டாருல்ல ஷாரிக். சந்தோஷம்தானே...’ என்பது போலான உள்ளர்த்தம் ஓராயிரம் அர்த்தம் எல்லாம் அதனுள் உண்டு.

ஆனால் ஐஸ்வர்யாவோ... ‘இந்த பிக்பாஸ் வீட்ல எனக்குக் கிடைச்சதும் யாஷிகாதான். இங்கே நான் இப்ப இழந்து நிக்கிறதும் யாஷிகாவைத்தான். ஆமாம்... யாஷிகாவோட பிரிவுதான் எனக்குப் பெரிய வலி, வேதனை. அந்த வலி, வேதனைக்கு முன்னாடி, வேற எதுவும் (பாயிண்ட்...) பெருசா தோணலை எனக்கு’ என்கிறார்.

சில தருணங்களில், சிலர், லவ்வை விட நட்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஐஸ்வர்யா அந்த வகையில் ஆயிரத்தில் ஒருத்திதான் போல!

 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close