[X] Close

சண்டக்கோழியில் சூர்யாதான் நடிச்சிருக்கணும்; என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக்கிய சண்டக்கோழி! - ஆடியோ விழாவில் விஷால் பெருமிதம்


sandakozhi2-vishal

சண்டக்கோழி 2 ஆடியோ விழாவில் விஷால்

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Sep, 2018 12:48 pm
  • அ+ அ-

சண்டக்கோழியில் சூர்யாதான் நடிச்சிருக்கணும். என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக்கியதே  சண்டக்கோழி படம்தான் என்று சண்டக்கோழி 2  ஆடியோ விழாவில் விஷால் பெருமிதத்துடன் குறிப்பிட்டுப் பேசினார். 

லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடித்த சண்டக்கோழி 13 வருடங்களுக்கு முன்பு வெளியானது. இப்போது அதன் இரண்டாம்பாகம் வெளியாகிறது. முதல் பாகத்தில், விஷால், மீராஜாஸ்மின், ராஜ்கிரண், லால் முதலானோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம்பாகம் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.

சண்டக்கோழி 2ல், விஷாலுடன் ஜோடி சேருகிறார் கீர்த்தி சுரேஷ். ராஜ்கிரண் முதலானோர் நடித்து வருகிறார்கள். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சண்டக்கோழி 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் விஷால் பேசியதாவது:

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக லிங்குசாமியைத் தெரியும் எனக்கு. அவருக்கும் எனக்கும் அப்போதிருந்தே நல்ல நட்பு உண்டு. அப்போது அவர் உதவி இயக்குநராக இருந்தார். பிறகு அவர் படம் பண்ண ஆரம்பித்தார். நானோ நடிக்கவந்தேன்.

அந்த சமயத்தில், லிங்குசாமியிடம் சென்று, ‘பிரமாதமா கதை வைச்சிருக்கீங்களாமே. நான் பண்றேனே. எனக்கு வாய்ப்பு கொடுங்க’ என்று கேட்டேன். உண்மையில், பெரியநடிகருக்காக வைத்திருந்த கதை அது. நடிகர் சூர்யாதான் சண்டக்கோழியில் நடிப்பதாக இருந்தது. அவரும் ஒத்துக்கொண்டார். இத்தனைக்கும் என் முதல் படம் செல்லமே ரிலீஸ் கூட ஆகவில்லை அப்போது.

இன்றைக்கு ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இருக்கிறேன் என்றால், அதற்கு அடித்தளம் போட்டது சண்டக்கோழிதான். இன்றைக்கு ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு சண்டக்கோழி படம், என் வாழ்வில் மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருப்பதுதான் காரணம்.

இப்போது பல வருடங்களுக்குப் பிறகு, சண்டக்கோழி 2 படம் எடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜ்கிரண் சாருடன் நிற்கும்போது, என் அப்பாவுடன் நிற்பது போலவே உணருவேன். அப்படியொரு அற்புதமான மனிதர் அவர். இன்றைக்கு 25 படங்கள் பண்ணியிருக்கிறேன் என்பதை பெரிய சாதனையாக நினைக்கவில்லை. அதேசமயம், 25வது படமாக, சண்டக்கோழி 2 வந்திருப்பது, கூடுதல் மகிழ்ச்சியாக உணருகிறேன்.

கீர்த்தி சுரேஷ் மிகச்சிறந்த நடிகை. அவர் நடித்த, நடிகையர் திலகம் படத்தின் டிரெய்லரைப் பார்த்துவிட்டு, ‘இவருக்கு நேஷனல் அவார்டு கிடைக்கும்’ என்று சொன்னேன். அப்படியொரு நடிப்பை அதில் வழங்கியிருந்தார். சண்டக்கோழி 2 படத்திலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் கீர்த்திசுரேஷ். அவர் சொன்னது போலவே, எனக்கு நல்ல நண்பர் கீர்த்தி சுரேஷ்!

இவ்வாறு விஷால் பேசினார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close