[X] Close

எங்களுக்கே இந்தக் கதி என்றால், விவசாயிகளுக்கு மக்களுக்கு? - தமிழக அரசை மறைமுகமாக சாடிய விஷால்


vishal-speech-at-sandakozhi-2-audio-launch

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 20:32 pm
  • அ+ அ-

எங்களுக்கே இந்தக் கதி என்றால், விவசாயிகளுக்கு மக்களுக்கு என்ன கதி என்று தமிழக அரசை மறைமுகமாக தன் பேச்சில் சாடினார் விஷால்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலெட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் நடிப்பில் வெளிவரும் 25-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

’சண்டக்கோழி 2’ இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவர் அளித்த பதில் வருமாறு:

'சண்டக்கோழி 2' படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது எங்களை எல்லாம் மறந்துவிடுவீர்கள். வரலெட்சுமி மட்டும் தான் உங்களுடைய மனதில் இருப்பார். நான் கட்சி தொடங்கவில்லை, இயக்கம் தானே அது. அதன் செயல்பாடுகள் தான் மக்களிடையே செல்ல வேண்டும். அதை படத்தில் திணிக்கக் கூடாது. இப்படத்தில் திருவிழா கொடி இருக்குமே தவிர, என்னுடைய கொடி இருக்காது.  அப்படி தெரிந்தால் கூட லிங்குசாமி கிராஃபிக்ஸில் அழித்துவிடுவார்.

கருத்துரிமை, பேச்சுரிமை இருக்கிறது. ஆனால், அது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். அந்த எல்லையை கருணாஸ் தாண்டியதால் மட்டுமே, சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திருப்பதாக நான் பார்க்கிறேன். ஆனால், எச்.ராஜா சாரோ, எஸ்.வி.சேகர் சாரோ ஏன் நாளைக்கு விஷாலே பேசி கைது பண்ணாமல் இருந்தால் ‘ஏன் கைது பண்ணல’ என்ற கேள்வி எழும். 

எல்லைத் தாண்டி பேசும் போது கண்டிப்பாக மாட்டிப்போம் என்று தெரியும். கருணாஸ் கைதில் முந்திக் கொண்டார். நாளை வேலூர் சிறைக்குச் சென்று கருணாஸ் சந்திக்கலாம் என்று இருக்கிறேன். தனிப்பட்ட ரீதியாக, கட்சி ரீதியாக கருத்து மட்டுமே கருணாஸ் கருத்து தெரிவித்திருக்கிறார். 

மேலும், சமீபத்தில் வேலைநிறுத்தம் செய்து தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். தற்போது அதற்கான அரசாணைக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம். ஒன்றுமே நடக்க மாட்டிக்குது. எங்களுக்கே இந்தக் கதி என்றால், விவசாயிகளுக்கு மக்களுக்கு என்ன கதி?. அதைப் பற்றி பேச வேண்டாம். 

பைரசிக்கான மாற்றம் வேண்டும் என்று தான் நாங்கள் எல்லாம் அரசியலுக்கு வருகிறோம். சைபர் க்ரைம் நினைத்தார்கள் என்றால் ஒரே நாளில் பைரசியை ஒழித்துக் கட்டலாம். ஏன் நடக்க மாட்டிக்குது என்று புரியவில்லை. அதனால் இந்திய சினிமாவுக்கே பல கோடி நஷ்டம். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தேர்தல் தேதி அறிவிக்கும் போது, எனது அறிவிப்பு வரும். 

சண்டக்கோழி 2 வெற்றி பெற்றால், நானும் கீர்த்தியும் லிங்குசாமி சார் அலுவலகத்தின் வாசலில் போய் ‘சண்டக்கோழி 3’க்காக நிற்போம். 

இவ்வாறு விஷால் பேசினார்.
 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close