[X] Close

மும்தாஜ்க்கு அப்போ செம முதுகுவலி;  அதோடதான் புரோட்டா பண்ணிக்கொடுத்தாங்க! - ஆர்த்தி நெகிழ்ச்சி


mumtaz-aarthi

மும்தாஜ் - ஆர்த்தி

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Sep, 2018 19:07 pm
  • அ+ அ-

தன் ரசிகர்களுடன் சந்தித்து மகிழ்ந்தார் நடிகை மும்தாஜ். ரசிகர்கள் அமைப்பு கூட இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தது.


சொல்லப்போனால், பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காகவும் அந்த நாட்களில் அவரின் குணம், ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் தெரிந்து வியந்தார்கள் என்பதைப் பாராட்டும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி இருந்தது.


இதில், பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆர்த்தி, மமதி, ரம்யா, ஆர்த்தியின் கணவர் கணவர் கணேஷ் முதலானோர் கலந்துகொண்டனர். 


இதில் ஆர்த்தி பேசியதாவது:


உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லணும். பிக்பாஸ் 1ல் இருந்த நாங்க எல்லாரும் இப்போ பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போயிருந்தோம், தெரியுமா? அப்போ மும்தாஜ் மேடத்துக்கிட்ட  பேசிக்கிட்டிருக்கும் போது, புரோட்டா பிடிக்கும்னு சொன்னேன். உடனே அவங்க சந்தோஷமா, நான் நல்லா புரோட்டா பண்ணுவேன். பண்ணித்தரட்டுமான்னு கேட்டாங்க.


அதோட மட்டுமில்லாம, அப்படியொரு பிரமாதமான புரோட்டாவை எங்களுக்குப் பண்ணிக்கொடுத்தார். இதுல ஒரு விஷயம் என்ன தெரியுமா? அப்ப அவங்களுக்கு கடுமையான பேக்பெய்ன். முதுகுவலியால ரொம்பவே அவதிப்பட்டுக்கிட்டே இருந்தாங்க. 


அன்பையும் உணவையும் கலந்து தந்த அற்புதமான மனுஷி மும்தாஜ். நம்ம வீட்டு ரேஷன் கார்டுலதான் அவங்க பேரு இல்ல. ஆனா ஒரு அம்மாவா, அக்காவா, தங்கச்சியா நம்ம மனசுல தனியிடம் பிடிச்சிருக்காங்க மும்தாஜ் மேடம். 


இவ்வாறு ஆர்த்தி பேசினார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close