[X] Close

நான் அழும் மீம்கள் நகைச்சுவையாகவே இருக்கின்றன: அனுஷ்கா சர்மா


anushka-sharma-memes

சூயி தாகா ட்ரெய்லரில் அனுஷ்கா சர்மா அழும் காட்சி

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 24 Sep, 2018 17:11 pm
  • அ+ அ-

தனது முகத்தை வைத்து மீம் போட்டு கலயாப்பது நகைச்சுவையாக இருப்பதாக நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.

வருண் தவான் - அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் ’சூயி தாகா’. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு தம்பதி, பலப் பிரச்சினைகளைத் தாண்டி சொந்தமாக தொழில் செய்து சாதிக்கும் கதையே இப்படம். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன் வெளியானது. வெளியான தினத்திலிருந்தே, ட்ரெய்லரில் அனுஷ்கா சர்மா அழும் காட்சியை புகைப்படம் எடுத்து, அதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் பதிவேற்ற ஆர்மபித்தனர்.

இன்றுவரை ஓயாமால் வரும் இந்த நையாண்டி குறித்து அனுஷ்கா சர்மாவிடம் கேட்டபோது, "எனக்கு அவை நகைச்சுவையாக இருந்தன. இது போன்ற ஒரு மீம் தானாக உருவாகிறது என்றால் அதற்கு இந்த ட்ரெய்லர் நன்றாக, ஆழமாக பரவியுள்ளது, அதனால் தான் மக்கள் அது குறித்து பேசுகின்றனர் என்று அர்த்தம். இந்தத் திரைப்படம் மிக யதார்த்தமானது. கதாபாத்திரங்கள் நிஜமானது. அதனால் அதை வைத்து ஒரு மீம் உருவாக்க முடியும். வழக்கமாக நான் செய்யும் கதாபாத்திரங்களை விட இது முற்றிலும் வித்தியாசமானது. இதை நான் பெரிய பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். இது பெரிய சாதகம்" என்று பதிலளித்தார்.

தனக்கு வந்த சில மீம்களை வருண் தவானுடனும் தான் பகிர்ந்ததாக அனுஷ்கா கூறியுள்ளார். இந்த மீம்களைப் பார்த்து இன்னும் பலர் ட்ரெய்லரைப் பார்க்கின்றனர் என வருண் தவான் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

’சூயி தாகா’ வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close