[X] Close

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் மாண்டோவில் இலவசமாக நடிப்பேன்: நவாசுதின் சித்திகி ட்வீட்


nawazuddin-tweet-manto

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 24 Sep, 2018 17:00 pm
  • அ+ அ-

சதத் ஹசன் மாண்டோவைப் பற்றிய படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இலவசமாக நடிப்பேன் என நடிகர் நவாசுதின் சித்திகி ட்வீட் செய்துள்ளார்.

பிரபல உருது எழுத்தாளர் சதத் ஹசன் மாண்டோவின் வாழ்க்கை வரலாறு படமான 'மாண்டோ', நந்திதா தாஸ் இயக்கத்தில், நவாசுதின் சித்திகி நடிப்பில் உருவானது. இதில் மாண்டோவாக நவாசுதின் நடித்திருக்கிறார். 2018ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் முதல் ப்ரீமியர் திரையிடல் நடைபெற்றது. இந்தப் படத்தில் நடிக்க நவாசுதின் ஒரு ரூபாயை மட்டுமே சம்பளமாகப் பெற்றார் என இயக்குநர் நந்திதாதாஸ் கூறியிருந்தார்.

கடந்த 21ஆம் தேதி இந்தப் படம் இந்தியாவில் வெளியானது. விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. நவாசுதின் சித்திகி நடிப்பையும் சிலாகித்து பலர் அவரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்தத் திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நவாசுதின், "வாய்ப்பு கிடைத்தால், மாண்டோ படத்தில் மீண்டும் நடிப்பேன். இம்முறை இலவசமாக. அதற்கு பதில் என் சொந்தப் பணத்தை செலவழித்து படத்தை எடுப்பேன். ஏனென்றால் மாண்டோ நாம் இப்போது இருக்கும் நிகழ்காலத்துக்கானதல்ல. காலத்தைத் தாண்டியது என்பது இன்று எனக்குப் புரிந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

நவாசுதின் தமிழில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ’பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close