[X] Close

தோழி ஐஸ்வர்யாவுக்கு காட்டாத அன்பை காட்டிவிட்டாய் யாஷிகா: காயத்ரி ரகுராம்


gayathri-raghuram-tweet-about-yashika-elimination

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 16:51 pm
  • அ+ அ-

தோழி ஐஸ்வர்யாவுக்கு காட்டாத அன்பை காட்டிவிட்டாய் யாஷிகா என்று காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார்.

’பிக் பாஸ் 2’ இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், இன்னும் ஐஸ்வர்யாவை ஏன் வெளியேற்றப்படவில்லை என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து பாலாஜி மற்றும் யாஷிகா இருவரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதில் யாஷிகாவின் வெளியேற்றம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

யாஷிகா வெளியேற்றம் தொடர்பாக பிக் பாஸ் 1 போட்டியாளர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சபாஷ் யாஷிகா. உனது தோழி ஐஸ்வர்யாவுக்கு நீ இதுவரை காட்டாத அன்பை நேற்று காட்டிவிட்டாய். எதையும் பெரிதாக்காமல் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறாய். நீ ஒரு ஊக்கசக்தி.

இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close