[X] Close

அதிகமான வெற்றிக்கு தகுதியானவள் யாஷிகா: சுஜா வரூணி


suja-varunee-tweets-about-yashika-elimination

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 16:47 pm
  • அ+ அ-

பிக் பாஸ் 2-வில் அதிகமான வெற்றிக்கு தகுதியானவள் யாஷிகா என்று சுஜா வரூணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

’பிக் பாஸ் 2’ இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், இன்னும் ஐஸ்வர்யாவை ஏன் வெளியேற்றப்படவில்லை என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து பாலாஜி மற்றும் யாஷிகா இருவரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதில் யாஷிகாவின் வெளியேற்றம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

யாஷிகா வெளியேற்றம் தொடர்பாக பிக் பாஸ் 1 போட்டியாளர் சுஜா வரூணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நீ ஒரு நிஜ போராளி. நீ வெளியேற்றப்படுவாய் என நான் எதிர்பார்க்கவில்லை. கடைசி டாஸ்குக்கு பிறகு நான் உன்னிடம் என்ன சொன்னேன் என்பதை நீ நினைவில் வைத்திருப்பாய் என நம்புகிறேன். 

இறுதிப் போட்டியில் நுழைவதைக் காட்டிலும் நீ அதிகமான வெற்றிக்கு தகுதியானவள். உன்னை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். உனது விளையாட்டுத்தனத்தை மெச்சுகிறேன். உனது பணி சிறக்க எனது வாழ்த்துகள். நீ பணியில் பல சாதனைகள் படைப்பாய் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

இவ்வாறு சுஜா வரூணி தெரிவித்திருக்கிறார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close