[X] Close

குலுமணாலி வெள்ளத்தில் சிக்கிய ‘தேவ்’ படக்குழு: உயிர் போய் வந்ததாக கார்த்தி உருக்கம்


dev-film-crew-in-deep-trouble

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 16:16 pm
  • அ+ அ-

குலுமணாலி வெள்ளத்தில் சிக்கியிருக்கிறது ‘தேவ்’ படக்குழு. உயிர் போய் வந்ததாக கார்த்தி உருக்கமாக தெரிவித்திருக்கிறார்

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவ்’. இப்படத்தின் முக்கிய காட்சிகள் படப்பிடிப்பு குலுமணாலியில் நடைபெற்று வருகிறது. அப்போது கன மழை, பயங்கர வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

இச்சம்பவம் குறித்து நடிகர் கார்த்தி கூறியிருப்பதாவது:

'தேவ்' படத்தின் படப்பிடிப்பை குலுமணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படமாக்க முடிவு செய்தோம். ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. 

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு கார், பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்க்கும் போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது.  இதனால் படப்பிடிப்புக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டது. 

4-5 மணி நேரம் நான் காரியிலேயே இருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியுள்ளேன். ஆனால் படக்குழுவினர் 140 பேரை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் எங்கே தங்குவர்கள் , சாப்பிடுவார்கள் எப்படி கீழே இறங்குவார்கள் என்று வருத்தமாக உள்ளது.

23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும். அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது

இவ்வாறு கார்த்தி தெரிவித்திருக்கிறார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close