[X] Close

காந்தி ஜெயந்தி வரை..


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:27 am
  • அ+ அ-

மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் விதமாக தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் தினமும் காலை 7.02 மணிக்கு ‘காந்தி 150’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதற்கான தகவல்கள் மற்றும் குரல் பதிவை பேராசிரியை சித்ரா பாலசுப்ரமணியம் வழங்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தூர்தர்ஷன் தொலைக்காட்சி நாடு முழுவதும் வெவ்வேறு பரிணாமத்தில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இது. கடந்த ஜனவரி 1-ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி வரை இந்த நிகழ்ச்சி பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

‘காந்தியி்ன் மந்திரச் சொல்’, காந்தியுடன் இருந்தவர்கள் பற்றிய ‘காந்தி ஆளுமைகள்’, காந்தி பற்றிய நூல்களை அலசும் ‘காந்தியை வாசியுங்கள்’ ஆகிய 3 பகுதிகளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.  நிகழ்ச்சி தயாரிப்பாளர் விஜயனின் பங்களிப்பும் இதற்கு பெரிய உதவியாக இருக்கிறது.

தேசத்தந்தையை நினைவுகூர்ந்து தொடர்ச்சியாக 10 மாதங்களுக்கு இந்த நிகழ்ச்சியை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close