[X] Close

சந்தானத்தின் ‘ஏ 1’ ஜூலை 26-ம் தேதி வெளியீடு


1-26

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 11:22 am
  • அ+ அ-

சந்தானம் நடித்துள்ள ‘ஏ 1’ படம்  ஜூலை 26-ம் தேதி வெளியாகிறது.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படத்தை, ராம்பாலா இயக்கினார். ராஜேந்திரன், ஊர்வசி, டி.எம்.கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஹாரர் காமெடிப் படமாக இது வெளியானது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஏ 1’ என்ற படத்தில் நடித்துள்ளார் சந்தானம். ‘நாளைய இயக்குநர்’ இரண்டாவது சீஸனின் வெற்றியாளரான ஜான்சன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ராஜேந்திரன், சுவாமிநாதன், மனோகர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லியோ ஜான் பால் எடிட் செய்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘ஏ 1’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. ரூ. 4.60 கோடிக்கு ஒளிபரப்பு உரிமை விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் ஜூலை 26-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘ஏ 1’ படத்தைத் தொடர்ந்து ‘டகால்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து யோகி பாபு நடிக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close